×

செயற்கை நுண்ணறிவு கூட்டு ஆராய்ச்சி விஐடி, நோக்கியா 5ஜி புரிந்துணர்வு ஒப்பந்தம்

வேலூர்: விஐடி பல்கலைக்கழகம், நோக்கியாவுடன் 5ஜி மற்றும் அடுத்த தலைமுறை செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் லேர்னிங் பற்றி கூட்டு ஆராய்ச்சி தொடர புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. விஐடி வேந்தர் கோ.விசுவநாதன், விஐடி துணைத்தலைவர்கள் சங்கர் விசுவநாதன், ஜி.வி.செல்வம் முன்னிலையில் விஐடி பதிவாளர் ஜெயபாரதி மற்றும் நோக்கியா பெங்களூரு பல்கலைக்கழக ஒத்துழைப்பு தலைவர் பொன்னி ஆகியோர் இதில் கையெழுத்திட்டனர். விஐடி துணை வேந்தர் காஞ்சனாபாஸ்கரன், இணை துணைவேந்தர் பார்த்தசாரதி மல்லிக், எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் துறை டீன் சிவானந்தம் மற்றும் நோக்கியா லேப்ஸ் தலைவர் மீனாட்சி, நோக்கியா விஐடி புரிந்துணர்வு ஒருங்கிணைப்பாளர் கோவர்தன் ஆகியோர் உடனிருந்தனர்.

இதன் மூலம், விஐடி மற்றும் நோக்கியா ஆகியவை 5ஜி, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மேம்படுத்தப்பட்ட தகவல் தொடர்பு, டிஜிட்டல் ட்வின், ரேடியோ அடிப்படையிலான உணர்திறன், இணைக்கப்பட்ட வான்வழி வாகனங்கள், மின்னணு ஆரோக்கியம் மற்றும் ஆட்டோமேஷன் போன்ற புதிய ஆய்வுப் துறைகளில் கவனம் செலுத்தும். நோக்கியாவின் வல்லுநர்கள் விஐடியின் பாடத்திட்டக் குழுவில் உறுப்பினர்களாக இருப்பார்கள். கற்றல், முன்மாதிரி மற்றும் மாணவர் திட்டங்களுக்கு வழிகாட்டுவார்கள். நோக்கியா விஐடி மாணவர்களுக்கான கற்றல் வாய்ப்புகளை வழங்கும் மற்றும் குறுகிய கால தொடர் கல்வி திட்டங்களை கூட்டாக ஏற்பாடு செய்யும்.

The post செயற்கை நுண்ணறிவு கூட்டு ஆராய்ச்சி விஐடி, நோக்கியா 5ஜி புரிந்துணர்வு ஒப்பந்தம் appeared first on Dinakaran.

Tags : Intelligence Joint Research VIT ,Nokia ,VIT University ,VIT ,Chancellor ,Ko Viswanathan ,Vice Presidents ,Shankar Viswanathan ,GV Selvam ,Intelligence Joint Research ,Dinakaran ,
× RELATED க்யூ.எஸ் அமைப்பின் நிலையான தன்மை...