- ராவுடி
- பொன்னேரி
- ராவுடி
- அருகில் மீன்சூர்
- ஆவடி போலீஸ் ஆர்போரெட்டம்
- மீஞ்சூர் காவல் நிலையம்
- எல்லை தோட்டம் மெட்டு காலனி
- தின மலர்
பொன்னேரி: மீஞ்சூர் அருகே ரவுடி கொடூரமாக வெட்டி கொலை செய்த வழக்கில் இவரது மனைவியின், கள்ளக்காதலன் உறவினர் வீட்டில் தலைமறைவாக இருந்த நிலையில் போலீசார் கைது செய்துள்ளனர். ஆவடி காவல் சரகம் மீஞ்சூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தோட்டக்காடு மேட்டு காலனி பெருமாள் கோவில் அருகே கடந்த 22ம் தேதி இரவு வாலிபர் ஒருவரை நான்கு பேர் கொண்ட கும்பல் சரமாரி வெட்டி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பித்து சென்றது. போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையில் பொன்னேரி சின்னக்காவனம் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன்(26) இவரது மனைவி பெயர் ரம்யா.
இதில் மீஞ்சூர் அடுத்த தோட்டக்காடு மேட்டு காலனியைச் சேர்ந்தவர் விஷ்ணு(24) என்பவருக்கும் ரம்யாவிற்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த 22ம் தேதி இரவு லட்சுமணன் தன் மனைவியுடன் இருந்த கள்ள தொடர்பு குறித்து விஷ்ணுவிடம் கேட்டபோது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், விஷ்ணுவின் தரப்பில் இருந்த நாலு பேர் கொண்ட கும்பல் லட்சுமணனை அறிவாளால் சரமாரி தலையில் வெட்டி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டது விசாரணையில் தெரியவந்தது.
இதுகுறித்து மீஞ்சூர் போலீசார் வழக்கு பதிவு செய்து லட்சுமணன் கொலை செய்த 5 பேரையும் பிடிக்க ஆவடி காவல் ஆணையர் சங்கர் உத்தரவின் பேரில் செங்குன்றம் காவல்துறை துணை ஆணையர் பாலகிருஷ்ணன் மேற்பார்வையில் மீஞ்சூர் காவல் நிலைய ஆய்வாளர் காளி ராஜ் தலைமையில் கொண்ட தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை செய்தனர். இதில், கொலையாளியான சரித்திர பதிவேடு குற்றவாளி விஷ்ணு(24) மீது கடந்த 2017 ஆண்டு முதல் மீஞ்சூர், காட்டூர், ஆவடி டேங்க் பேக்டரி, ஆரம்பாக்கம், கும்மிடிப்பூண்டி, கவரப்பேட்டை, பொன்னேரி, வெங்கல் ஆகிய காவல் நிலையங்களில் 24 வழக்குகள் நிலுவையில் உள்ளது என தெரிய வந்தது.
மேலும், சரித்திர பதிவேடு குற்றவாளியான விஷ்ணு மற்றும் இவரது தம்பி விஷால்(22) மேலும், நண்பர்கள் காணியம்பாக்கத்தை சேர்ந்த சாது(22), தேவதானத்தை சேர்ந்த அரிஷ்(20), வெள்ளம்பாக்கத்தைச் சேர்ந்த கார்த்திக்(22) ஆகியோர் தலைமாறாக இருந்தனர். இதில், இரண்டு தினங்களுக்கு முன்பு சாது, ஹரிஷ், கார்த்திக் ஆகிய மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு சரித்திர பதிவேடு முக்கிய குற்றவாளியான விஷ்ணுவை அவரது உறவினர் வீட்டில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள விஷ்ணுவின் தம்பி விஷாலை போலீசார் தேடி வருகின்றனர்.
The post ரவுடி கொலை வழக்கில் கள்ளக்காதலன் கைது appeared first on Dinakaran.