×

மணப்பாறை அருகே 10 கி.மீ. துரத்திச் சென்று திருடனை பிடித்த பொதுமக்கள்!!

திண்டுக்கல்: மணப்பாறை அருகே பொதுமக்கள் 10 கி.மீ. தூரம் துரத்திச் சென்று திருடனை பிடித்தனர். வையம்பட்டியில் முகவரி கேட்பதுபோல் வந்த மர்மநபர், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியை லில்லிராணியிடம் நகையை பறித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிய நிலையில் பொதுமக்கள் துரத்திச் சென்றனர். 10 கி.மீ. தூரம் சென்ற நிலையில் கரட்டுப்பட்டி என்ற இடத்தில் கார் மோதியதில் திருடன் தடுமாறி கீழே விழுந்தான். பின்னர் திருடன் இருசக்கர வாகனத்தை சாலையிலேயே போட்டுவிட்டு அருகே வனப்பகுதிக்குள் சென்றான். பொதுமக்கள் விடாமல் துரத்திச் சென்று திருடனை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

 

The post மணப்பாறை அருகே 10 கி.மீ. துரத்திச் சென்று திருடனை பிடித்த பொதுமக்கள்!! appeared first on Dinakaran.

Tags : Manapara m. ,Dindigul ,Manapara ,Wyambatti ,Lillarani ,
× RELATED திண்டுக்கல் அருகே குடோனில் பதுக்கிய 215 கிலோ குட்கா பறிமுதல்