×
Saravana Stores

வங்கதேசத்தை வீழ்த்திய ஆஸ்திரேலியா

நார்த்சவுன்ட்: ஐசிசி டி.20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், சூப்பர் 8 சுற்றில் நார்த்சவுன்ட் மைதானத்தில் இன்று காலை நடந்த போட்டியில் ஆஸ்திரேலியா-வங்கதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணியில் தன்சித் ஹசன் டக்அவுட் ஆக, லிட்டன் தாஸ் 16 ரிஷாத் ஹொசைன் 2 ரன்னில் அவுட் ஆகினர். கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 41 (36 பந்து), டவ்ஹித் ஹ்ரிடோய் 40(28பந்து) ரன் எடுத்தனர். ஷாகிப் அல்ஹசன் 8, மகமதுல்லா 2ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர். 20 ஓவரில் வங்கதேசம் 8 விக்கெட் இழப்பிற்கு 140 ரன் எடுத்தது. ஆஸ்திரேலிய பவுலிங்கில் பாட் கம்மின்ஸ், 18வது ஓவரின் கடைசி 2 பந்து, 20வது ஓவரின் முதல் பந்தில் என விக்கெட் எடுத்து ஹாட்ரிக் சாதனை படைத்தார்.

நடப்பு டி.20 உலக கோப்பையில் இது முதல் ஹாட்ரிக் ஆகும். ஒட்டுமொத்தமாக உலக கோப்பையில் 8வது ஹாட்ரிக் . பிரட்லீக்கு பிறகு வங்கதேசத்திற்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட் எடுத்த வீரர என்ற சிறப்பை கம்மின்ஸ் படைத்தார். ஆடம் ஜாம்பா 2 விக்கெட் எடுத்தார். பின்னர் களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணியில் டிராவிஸ் ஹெட் 31 ரன்னில் வெளியேற அடுத்த வந்த கேப்டன் மார்ஷ் 1 ரன்னில் எல்பிடபிள்யூ ஆனார். 11.2 ஓவரில் ஆஸ்திரேலியா 2 விக்கெட் இழப்பிற்கு 100 ரன் எடுத்திருந்தபோது மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இதையடுத்து டக்வொர்த் லீவிஸ் விதிப்படி ஆஸ்திரேலியா 28 ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. வார்னர் 53, மேக்ஸ்வெல் 14 ரன்னில் களத்தில் இருந்தனர்.

 

The post வங்கதேசத்தை வீழ்த்திய ஆஸ்திரேலியா appeared first on Dinakaran.

Tags : Australia ,Bangladesh ,Northsound ,ICC T20 World Cup cricket ,Super 8 round ,Northsound Stadium ,Dinakaran ,
× RELATED வங்கதேச ஒருநாள் அணி கேப்டனாக நீடிக்கிறார் ஷான்டோ