×

நீட் வினாத்தாள் கசிவு: பீகாரைச் சேர்ந்த மாணவர் ஒருவர் ஒப்புதல்

டெல்லி: நீட் தேர்வு வினாத்தாளை விலைக்கு வாங்கியதை பீகாரைச் சேர்ந்த மாணவர் ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார். சமஸ்திபூரைச் சேர்ந்த அனுராக் யாதவ் தனது உறவினர் மூலம் நீட் வினாத்தாளை விலைக்கு வாங்கியதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். மே 4-ம் தேதி நீட் வினாத்தாளை கசியவிட்ட அமித் ஆனந்த் மற்றும் நிதிஷ்குமாரிடம் மாணவரை உறவினர் அழைத்துச் சென்றுள்ளார். 2 பேரிடம் இருந்து நீட் வினாத்தாள் மற்றும் விடைத்தாள் ஆகியவை மாணவரிடம் வழங்கப்பட்டன. வினா, விடைத்தாள் கிடைத்ததை அடுத்து அன்றிரவே படித்துவிட்டு தேர்வு எழுதியதாக மாணவர் அனுராக் யாதவ் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

The post நீட் வினாத்தாள் கசிவு: பீகாரைச் சேர்ந்த மாணவர் ஒருவர் ஒப்புதல் appeared first on Dinakaran.

Tags : Bihar ,Delhi ,Anurag Yadav ,Samastipur ,Neat ,Dinakaran ,
× RELATED குஜராத், பீகார் மாநில...