×

ஆர்டர் செய்த பொருளுடன் உயிருள்ள பாம்பு சப்ளை செய்த அமேசான்: வாடிக்கையாளர் அதிர்ச்சி

பெங்களூரு: அமேசான் நிறுவன பணியில் குளறுபடியால், எக்ஸ்பாக்ஸ் கன்ட்ரோலருடன் உயிருள்ள பாம்பு சப்ளை செய்யப்பட்டது. இதனை வாங்கிய வாடிக்கையாளர் கடும் அதிர்ச்சியடைந்தார். பெங்களூரு ‘சர்ஜாபூர் சாலையில் உள்ள குடியிருப்பில் வசிப்பவர் பிரகாஷ். இவர், அமேசான் நிறுவனத்திடம் இருந்து எக்ஸ்பாக்ஸ் கன்ட்ரோலர் ஆர்டர் செய்தார். அதன்படி அவருக்கு பார்சல் வந்தது. அதை அவர் பிரித்து பார்த்தபோது, பார்சலில் உயிருள்ள பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதிர்ஷ்டவசமாக, பேக்கிங் டேப்பில் விஷப்பாம்பு சிக்கியதால் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. இதனை, தனது செல்போனில் வீடியோ எடுத்த அவர், ட்விட்டர் தளத்தில் பதிவு செய்துள்ளார். அதில், அமேசான் பெட்டியைத் திறந்தபோது, ​​‘எக்ஸ்பாக்ஸ் கன்ட்ரோலருடன்’ பாம்பு ஒன்று நெளித்தபடி இருந்தது. பெட்டியில் ஒட்டப்பட்டிருந்த பேக்கிங் டேப்பில் பாம்பு சிக்கியதால், எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. அந்த பெட்டியை வாளியில் வைத்து வீடியோ எடுத்துள்ளேன். அமேசானில் ஆர்டர் செய்ததால் பாம்பு இலவசமாக கிடைத்தது என குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த பதிவுக்கு உடனடியாக பதிலளித்த அமேசான் நிறுவனம், மன்னிப்பு கேட்டதுடன், அந்த பொருளுக்கு அவர் செலுத்திய தொகையை திருப்பி தருவதாக தெரிவித்தது.

The post ஆர்டர் செய்த பொருளுடன் உயிருள்ள பாம்பு சப்ளை செய்த அமேசான்: வாடிக்கையாளர் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Amazon ,BENGALURU ,Prakash ,Sarjapur Road, Bengaluru ,Amazon… ,
× RELATED பார்சலுக்குள் பாம்பு.. ஆன்லைனில்...