- திருச்சி
- சிஐடியு சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம்
- திருச்சி பெருநகர மாவட்டத்தின் 11வது ஆண்டு சபை
- வென்மணி ஹௌஸ்
- சங்கா மாவட்டம்
- ஜனாதிபதி
- வீரமுத்து
- தின மலர்
திருச்சி, ஜூன் 12: சி.ஐ.டி.யு சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க திருச்சி மாநகர் மாவட்ட 11ம் ஆண்டு பேரவை கூட்டம் செவ்வாய் அன்று வெண்மணி இல்லத்தில் நடந்தது. கூட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் வீரமுத்து தலைமை வகித்தார். வேலை அறிக்கையை பொதுச்செயலாளர் சந்திரன் வாசித்தார். வரவு -செலவு அறிக்கையை மாவட்ட பொருளாளர் சுரேஷ் சமர்ப்பித்தார். சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் துவக்க உரையாற்றினார். அரசு போக்குவரத்து சங்க மாவட்ட பொதுச் செயலாளர் மாணிக்கம், ஆட்டோ சங்க மாவட்ட பொதுச் செயலாளர் மணிகண்டன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
கூட்டத்தில் ஆன்லைன் அபராதத்தை தடை செய்ய வேண்டும். சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். திருச்சியில் சிஎன்ஜி கேஸ் பங்குகளை அதிகப்படுத்த வேண்டும். மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும். நலவாரிய பதிவுகளை எளிமையாக்கி, பண பயன்களை இரட்டிப்பாக்கி விண்ணப்பித்தவர்களுக்கு உடனுக்குடன் வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதிய நிர்வாகிகளாக தலைவராக சுரேஷ், செயலாளராக சந்திரன், பொருளாளராக ஆண்டனி சுரேஷ் மற்றும் துணை நிர்வாகிகள் உட்பட 17 பேர் கொண்ட மாவட்டக் குழுவாக தேர்வு செய்யப்பட்டது. தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளன பொருளாளர் பார்த்தசாரதி, நிறைவுறையாற்றினார். முடிவில் சாலைப்போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்ட துணைத்தலைவர் ஆண்டனி சுரேஷ் நன்றி கூறினார்.
The post சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் appeared first on Dinakaran.