×

வேப்பூரை பேரூராட்சியாக தரம் உயர்த்த கோரிக்கை

 

குன்னம், ஜூன்12: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் கிராமத்தை பேரூராட்சியாக மாற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஓலைப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியாக வேப்பூர் கிராமம் உள்ளது. இந்த ஊராட்சியில் வேப்பூர், கல்லை, ஜி.ஆர்.பட்டினம், ஓலைப்பாடி உட்பட நான்கு கிராமங்கள் உள்ளன. இதனால் குடிநீர் வசதி கழிவுநீர் வாய்க்கால் மற்றும் அடிப்படை வசதிகள் செய்ய இயலவில்லை.

வேப்பூரில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம், அரசு மருத்துவமனை, அரசு மேல்நிலைப்பள்ளி, தொடக்கப்பள்ளி கல்வி அலுவலகம், வேளாண்மை அலுவலகம், வங்கிகள் மற்றும் சுமார் 3000க்கும் மேற்பட்ட மகளிர் படிக்கும் மகளிர் கலை கல்லூரி உள்ளது.

வேப்பூருக்கு பெரம்பலூர், அரியலூர், திட்டக்குடி உட்பட்ட பகுதியில் இருந்து தினமும் 50க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்கின்றன. தினமும் இங்கு பல்வேறு வேலை களுக்காக 1000 த்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் விவசாயிகள் வந்து செல்கின்றனர் இதனால் அடிப்படை வசதி இல்லாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே வரும் உள்ளாட்சி தேர்தலுக்குள் ஓலைப்பாடி ஊராட்சியில் இருந்து வேப்பூர் கிராமத்தை தனியாக பிரித்து பேரூராட்சியாக அறிவிக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post வேப்பூரை பேரூராட்சியாக தரம் உயர்த்த கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Veypur ,Gunnam ,Perambalur district ,Olaipadi ,Kallai ,GR Pattinam ,Dinakaran ,
× RELATED வேப்பூர் பகுதியில் இடி, மின்னலுடன் கனமழை: விவசாயிகள் மகிழ்ச்சி