×

ராகுல்காந்தி பிறந்தநாள் விழா

அரியலூர், ஜூன் 20: அரியலூரில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பிறந்த நாளையொட்டி அக்கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி நேற்று கொண்டாடினர். காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் சங்கர் தலைமையில் மூத்த தலைவர் சீனி.பாலகிருஷ்ணன், நகரத் தலைவர் சிவகுமார், வட்டாரத் தலைவர் பாலகிருஷ்ணன், மாநில மகளிர் அணி துணைத் தலைவி ரேணுகாதேவி, மாவட்ட துணைத் தலைவர் கலைச்செல்வன், பொதுச் செயலர் ரவிச்சந்திரன், முன்னாள் பொதுக் குழு உறுப்பினர் பூண்டி சந்தானம் உள்ளிட்டோர் அரியலூர் செட்டி ஏரிக் கரையிலுள்ள மகாத்மா காந்தி மற்றும் காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன் பின்னர் கட்சிக் கொடியை ஏற்றி வைத்த மாவட்டத் தலைவர் சங்கர், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி, ராகுல் காந்தி திறமைகளை பாராட்டி பேசினார். முன்னதாக செட்டி ஏரிக்கரை விநாயகர் கோயிலில் ராகுல் காந்தி பெயரில் அர்ச்சனை செய்யப்பட்டது.

The post ராகுல்காந்தி பிறந்தநாள் விழா appeared first on Dinakaran.

Tags : Rakulganti Birthday Celebration ,ARIYALORE ,AKKADASIANS ,FORMER CONGRESS ,RAKULGANDHI ,Cheeney ,Congress ,Shankar ,Balakrishnan ,Sivakumar ,Vattarat ,Rakul Gandhi Birthday Festival ,Dinakaran ,
× RELATED ராகுல்காந்தி பிறந்தநாள் விழா