×

குன்னம் ஜமாபந்தியில் மாற்றுத்திறனாளிக்கு உடனே பட்டா வழங்கிய கலெக்டர்: பொதுமக்கள் பாராட்டு

 

குன்னம், ஜூன் 19: பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முதல் குன்னம் தாலுகாவில் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் தலைமையில் ஜமாபந்தி நடைபெற்று வருகிறது. இந்த ஜமாபந்திகள் பெண்ணக்கோணம், வடக்கலூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு ஜமாபந்தி நடைபெற்றது. சென்னக்கோணம் தெற்கு பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி மகன் முருகன் (38) இவர் மாற்றுத்திறனாளி இவருக்கு சொந்தமான நிலத்தில் நத்தம் பட்டா அளவுகள் சரியாக உள்ளது. ஆனால் ஆன்லைன் பட்டாவாக மாற்றியபோது நிலத்தின் அளவு குறைவாக உள்ளது.

இதுகுறித்து இவர் பெண்ணைக்கோணம் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வடக்கலூர் வருவாய் ஆய்வாளர் அவர்களிடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே இதுகுறித்து நேற்றைய ஜமாபந்தியில் முருகன் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தார். அதன் பெயரில் மாவட்ட கலெக்டர் உரிய விசாரணை செய்து உடனே மாற்றுத்திறனாளி நபருக்கு பட்டா வழங்க உத்தரவிட்டார். இதைக் கண்ட பொதுமக்கள் மாவட்ட கலெக்டரை பெரிதும் பாராட்டினர்

The post குன்னம் ஜமாபந்தியில் மாற்றுத்திறனாளிக்கு உடனே பட்டா வழங்கிய கலெக்டர்: பொதுமக்கள் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Kunnam Jamabandhi ,Gunnam ,Jamabandhi ,Perambalur district ,Gunnam taluk ,Collector ,Karpagam ,Pennakonam ,Vadakalur ,Chennakonam ,Dinakaran ,
× RELATED மங்களமேடு அருகே மின்சார கம்பிவேலியில் சிக்கி தொழிலாளி பலி