×

டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்

 

பெரம்பலூர்,ஜூன் 19: கல்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் தாலுக்காவில் உள்ள கல்பாடிஅரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் ஆல் தி சில்ரன் அறக் கட் டளைஇணைந்து டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு முகாமினை நடத்தியது. இதனையொட்டி கல்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொசுக்க ளால் உண்டாகும் டெங்கு காய்ச்சல் மற்றும் டெங்கு பரவும் விதம், பொதுமக்கள் டெங்கு காய்ச்சல் வராமல் தங்களை எப்படி பாதுகாத் துக் கொள்வது, சுற்றுப் புறத்தை தூய்மையாக வைத்து கொள்வது என்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மருத்துவ அலுவலர் டாக்டர் தேன்மொழி மற்றும் கல்பாடி அரசு ஆரம்ப சுகா தார நிலைய ஆய்வாளர் அசோக்குமார் ஆகியோர் பேசுகையில், ஏடிஸ் கொசு மூலம் பரவும் டெங்குக் காய்ச்சல், தேங்கி நிற்கும் மழை நீரால் கொசுக்கள் உற்பத்தியாதல், டெங்கு காய்ச்சலுக்கான பொது வான அறிகுறிகள், நடுக் கத்துடன் கூடிய காய்ச்சல் குறித்தும் விளக்கிப் பேசி னர்.

இந்த நோய் மிகவும் பொதுவானது என்றாலும், சுகாதாரம் மற்றும் சரியான சிகிச்சைமுறைகளால் நோய் பரவுவதைத் தடுக்க லாம். “எனது உடல்நலம், எனது உரிமை” டெங்கு காய்ச்சல் தடுப்பு, கண்டறி தல் மற்றும் சிகிச்சைக் கான சேவைகளை அரசு வழங்கி வருகிறது என்றும் கூறினர். ஆல் தி சில்ரன் அறக்கட்டளை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராமு நிகழ்ச்சிகளை ஒருங்கி ணைத்தார். கல்பாடி டெங்கு ஒழிப்புபணியாளர் சாந்தி நன்றி கூறினார். முகாமில் கலந்து கொண்ட பொது மக்களுக்கு நில வேம்பு கசாயம் மற்றும் கொசு வலை வழங்கப்பட்டது.

The post டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் appeared first on Dinakaran.

Tags : Dengue Eradication Awareness Camp ,Perambalur ,dengue ,Kalpadi ,Government Primary Health Centre ,Kalpadi Government Primary Health Center ,Perambalur taluk ,Perambalur District ,All ,Children Charitable Society ,Dinakaran ,
× RELATED நீராதாரங்களாக விளங்கும் ஆறுகளில்...