×

நெகிழி ஒழிப்பு, துணிப்பைகள் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு

 

பெரம்பலூர்,ஜூன் 19: பெரம்பலூரில் நேற்று(18 ஆம்தேதி) உலக சுற்று சூழல்தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் நகராட்சி, மற்றும் ஹேன்ஸ் ரோவர் பப்ளிக் பள்ளி இணைந்து நடத்தும் தூய்மை, நெகிலி ஒழிப்பு, துணிப்பைகளை உபயோகித்தல் போன்ற விழிப்புணர்வு, ரோவர் பள்ளி முதல் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவல கம்வரை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்விக் குழுமங்களின் தாளாளர் வரதராஜன், பெரம்பலூர் நகராட்சித் தலைவர் அம்பிகா ராஜேந் திரன், ஆணையர் ராமர், நகராட்சியின் சுகாதார அலுவலர் மூர்த்தி, தூய்மை பணி மேற்பார்வையாளர் கள், தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் ஏராளமா னோர் கலந்துகொண்டு ரோவர்வளைவு,வெங்கடேச புரம்,

பாலக்கரை உள்ளிட்ட பகுதிகளில் சாலை ஓரம் உள்ள கடை வியாபாரிக ளிடம், ஹோட்டல் முதலாளி களிடம், பாதசாரிகளிடம் நெகிலி ஒழிப்பு, துணிப் பைகளை உபயோகித்தல் போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு துணி பைகளை வழங்கியும்சென் றனர். மேலும் சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு தொடர்பாக சைக்கிள் பேர ணியும் பள்ளி வளாகத்தில் இருந்து நடைபெற்றது. நிகழ்ச்சியில் பள்ளி முதல் வர் ஆசிரியர்கள் நகராட்சி ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

The post நெகிழி ஒழிப்பு, துணிப்பைகள் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Perambalur ,World Environment Day ,Perambalur Municipality ,Hanes Rover Public School ,Rover School ,Dinakaran ,
× RELATED அன்னவாசல் பெண்கள் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு பேரணி