×

பாடாலூர் அருகே தனியார் டயர் தொழிற்சாலை தொழிலாளி மர்மசாவு

 

பாடாலூர், ஜூன் 21: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் அருகேயுள்ள தனியார் டயர் தொழிற்சாலையில் பணிபுரிந்த வட மாநில தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழந்தார். அசாம் மாநிலம் செலெங்குரி பகுதியை சேர்ந்தவர் துளசி ஹசாரிகா மகன் மனோ ஹசாரிகா (28). இவர் ஆலத்தூர் தாலுகா விஜயகோபாலபுரத்தில் உள்ள தனியார் டயர் தொழிற்சாலையில் கடந்த 2 ஆண்டுகளாக ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார்.

கடந்த செவ்வாய்க்கிழமை காணாமல் போன நிலையில் நேற்று அதே பகுதியில் உள்ள ஒரு ஓடையில் ஒருவர் உயிரிழந்த நிலையில் கிடப்பதாக மாடு மேய்த்தவர்கள் பார்த்து தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விசாரணை நடத்தியதில் அவர் மனோஹசாரிகா என தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் மாவட்ட அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பாடாலூர் அருகே தனியார் டயர் தொழிற்சாலை தொழிலாளி மர்மசாவு appeared first on Dinakaran.

Tags : Marmasau ,Padalur ,North State ,Aladhur Taluk ,Perambalur District ,Tulsi Hazarika ,Mano Hazarika ,Selenguri ,Assam ,Badalur ,Dinakaran ,
× RELATED கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வடமாநில வாலிபர் உட்பட 2 பேர் கைது