×
Saravana Stores

ரூ.40 கோடி ஜிஎஸ்டி செலுத்தும்படி 100 நாள் தொழிலாளிக்கு நோட்டீஸ்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலைக்கிராமத்தை சேர்ந்தவர் மணி. இவருடைய மனைவி மலர்(54). இவர் 100 நாள் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு கடந்த 13.3.2024 அன்று விழுப்புரம் மாநில வணிக வரி துணை ஆணையர் அலுவலகத்தில் இருந்து ஒரு நோட்டீஸ் வந்துள்ளது.

அதில் தமிழ்நாடு ஜிஎஸ்டி வரி விதிப்பின்படி ரூ.21 கோடியே 92 லட்சத்தி 29 ஆயிரத்து 406 செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு மீண்டும் நோட்டீஸ் வந்துள்ளது. அதில் 2020, 2021 மற்றும் 2022 ஆகிய மூன்றாண்டின் சிஜிஎஸ்டி மற்றும் எஸ்ஜிஎஸ்டி என 2 ஜிஎஸ்டிக்கும் அபராதம் அதற்கு உண்டான வட்டி என ரூ.40 கோடி செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருப்பத்தூர் எஸ்பி அலுவலகத்தில் மலர் நேற்று புகார் அளித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘நான் வீட்டின் அருகே உள்ள மகளிர் குழுவில் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு கொடுத்து அவ்வப்போது கடன் பெற்று வந்தேன். இதனை பயன்படுத்தி யாரோ போலியாக நிறுவனம் தொடங்கி மோசடி செய்திருக்க வாய்ப்புள்ளது. தற்போது ரூ.40 கோடி ஜிஎஸ்டி தொகை செலுத்தும்படி நோட்டீஸ் வந்துள்ளது. இந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் எங்கள் குடும்பத்தினர் தவிக்கிறோம்’ என்றார்.

The post ரூ.40 கோடி ஜிஎஸ்டி செலுத்தும்படி 100 நாள் தொழிலாளிக்கு நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : Tirupathur ,Mani ,Elagiri hill village ,Jolarpet ,Tirupattur district ,Malar ,Villupuram ,State ,Tax ,
× RELATED சார்ஜ் ஏற்றிய போது தீப்பிடித்த...