- ஆஸ்திரேலிய வீரர்களான
- பிரிட்ஜ்டவுன்
- ஆஸ்திரேலியா
- ஓமான்
- ஐசிசி
- ஆண்கள்
- T20 உலக கோப்பை
- பிரிட்ஜ்டவுன், பார்படோஸ்
- தின மலர்
பிரிட்ஜ்டவுன்: ஐசிசி ஆண்கள் டி20 உலக கோப்பை ேபாட்டியின் 10வது லீக் ஆட்டத்தில் பி பிரிவில் உளள ஆஸ்திரேலியா-ஓமன் அணிகள் மோதின. பார்படாசின் பிரிட்ஜ்டவுன் நகரில் நேற்று நடந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஓமன் நம்பிக்கையுடன் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதனால் முதலில் களம் கண்ட ஆஸியின் வார்னர், ஸ்டோய்னிஸ் அதிரடியால் 20 ஓவர் முடிவில் 5விக்கெட் இழப்புக்கு 164ரன் எடுத்தது.
வார்னர் 56(51பந்து, 6பவுண்டரி, 1சிக்சர்) ரன்னும், ஸ்டோய்னிஸ் ஆட்டமிழக்காமல் 67(36 பந்து, 2பவுண்டரி, 6சிக்சர்) ரன்னும் எடுத்தனர். மற்றவர்கள் குறைந்த ரன்னில் ஆட்டமிழந்தனர். ஓமன் வீரர் மெஹ்ரன் கான் 2 விக்கெட் வீழ்த்தினார். அதனையடுத்து 165ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது ஓமன். அந்த அணி ஆஸி பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்தது.
ஆஸிக்கு வெற்றி எளிதாக வசப்படவில்லை. ஓமன் 20 ஓவர் வரை தாக்குப்பிடித்து 9 விக்கெட் இழப்புக்கு 125ரன் மட்டுமே எடுத்தது. அதனால் ஆஸி 39 ரன் வித்தியாசத்தில் வெற்றி கணக்கை தொடங்கியது. தொடர்ந்து 2வது தோல்வியை சந்தித்துள்ள ஓமன் வீரர்களில் அதிகபட்சமாக அயான் கான் 36(30பந்து, 2பவுண்டரி, 2சிக்சர்), மெஹ்ரன் கான் 27(16பந்து, 1பவுண்டரி, 2சிக்சர்) ரன் எடுத்தனர். ஆஸி தரப்பில் ஆட்ட நாயகன் ஸ்டோய்னிஸ் 3 விக்கெட், ஸ்டார்க், எல்லீஸ், ஸம்பா ஆகியோர் தலா 2விக்கெட் கைப்பற்றினர்.
The post ஆஸி போராடி வெற்றி appeared first on Dinakaran.