- கல்வி பாதுகாப்பு
- Senthamangalam
- பள்ளி கல்வி பாதுகாப்பு இயக்கம்
- புதுச்சத்திரம் ஒன்றியம்
- கலங்கணி கிராமப் பள்ளி கல்வி பாதுகாப்பு இயக்கம்
- பள்ளி கல்வி பாதுகாப்பு மக்கள் கூட்டம்
- தின மலர்
சேந்தமங்கலம், ஜூன் 6: பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம் சார்பில் அரசு பள்ளிகளை பாதுகாத்து மேம்படுத்திட மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது. புதுச்சத்திரம் ஒன்றியம், களங்காணி கிராமத்தில் பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில், அரசு பள்ளிகளை பாதுகாத்து மேம்படுத்த மாநிலம் தழுவிய மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது. பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்க மண்டல ஒருங்கிணைப்பாளர் லதா அண்ணா துரை தலைமையில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் அரசு பள்ளிகளை பாதுகாப்போம், அதனை மேம்பாடு செய்வோம், அரசுப் பள்ளிகளுக்கு தேவையான உதவிகள், மாணவர் சேர்க்கை ஆலோசனை, சிறந்த கல்வி வழங்க ஆலோசனை உள்ளிட்டவற்றை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தாமாக முன்வந்து செய்திட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டது.
ஒவ்வொரு அரசு பள்ளியிலும், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் பள்ளிக்கு தேவையான சிறப்பு நிதி உதவிகள் வழங்கி அரசு பள்ளியை பேணி காக்க வேண்டும் என, கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இந்த கூட்டம் மாநில முழுவதும் 350 மையங்களில் நடைபெற்று வருவதாக மண்டல ஒருங்கிணைப்பாளர் லதா தெரிவித்தார். கூட்டத்தில் முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
The post பள்ளிக்கல்வி பாதுகாப்பு மக்கள் சந்திப்பு கூட்டம் appeared first on Dinakaran.