- பேளுக்குறிச்சி பேருந்து
- Senthamangalam
- பேளுக்குறிச்சி
- Kollimalai
- செந்தமங்கலம் யூனியன்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
சேந்தமங்கலம், அக்.22: சேந்தமங்கலம் ஒன்றியம், பேளுக்குறிச்சி கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள வாரச்சந்தை பிரசித்தி பெற்றது. 3 மாதங்கள் நடைபெறும் இந்த சந்தையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வந்து, ஒரு வருடத்திற்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கி செல்வார்கள். பொருட்களை வாங்கிக் கொண்டு பஸ் ஸ்டாப்பில் நீண்ட நேரம் வெயில், மழையில் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. இதையடுத்து, சேந்தமங்கலம்- ராசிபுரம் சாலையில் உள்ள பேளுக்குறிச்சி பஸ் ஸ்டாப்பில் பயணிகள் நிழற்கூடம் அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும், வியாபாரிகளும் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம், ராஜேஷ்குமார் எம்பியிடம் மனு அளித்தது. இதனையேற்று அவர் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, ₹6 லட்சம் நிதியை நிழற்கூடம் அமைக்க ஒதுக்கீடு செய்தார். இதையடுத்து பஸ் ஸ்டாப்பில் நிழற்கூடம் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
The post பேளுக்குறிச்சி பஸ் ஸ்டாப்பில் பயணிகள் நிழற்கூடம் அமைக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.