×

102, 108 ஆம்புலன்ஸ் பணியில் சேர வேலை வாய்ப்பு முகாம்

நாமக்கல்,நவ.10: நாமக்கல்லில் 102, 108 ஆம்புலன்ஸில் பணியாற்ற இன்று சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. நாமக்கல் மோகனூர் ரோட்டில், பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள 108 ஆம்புலன்ஸ் அலுவலகத்தில் 102 மற்றும் 108 ஆம்புலன்ஸ்களில் பணிபுரிய சிறப்பு வேலை வாய்ப்பு முகாம், இன்று (10ம்தேதி) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. 102ல் சுகாதார அதிகாரியாக பணிபுரிய, பிஎஸ்சி நர்சிங், ஜிஎன்எம், ஏஎன்எம் இதில் ஏதாவது ஒரு படிப்பு முடித்திருக்க வேண்டும். வயது 19 முதல் 30க்குள் இருக்க வேண்டும். மாத சம்பளம் ₹18 ஆயிரம் வழங்கப்படும். அதேபோல், 108ல் மருத்துவ உதவியாளர்களுக்கான அடிப்படை தகுதிகளாக பிஎஸ்சி நர்சிங் அல்லது ஜிஎன்எம், ஏஎன்எம், டிஎம்எல்டி (12ம் வகுப்பிற்கு பிறகு 2 ஆண்டுகள் படித்திருக்க வேண்டும்) அல்லது லைஃப் சயின்ஸ், பிஎஸ்சி ஜூவாலஜி, பாட்டனி, பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோ பயாலஜி, பயோ டெக்னாலஜி, இவைகளில் ஏதேனும் ஒன்று முடித்திருக்க வேண்டும். வயது தேர்வு அன்று 19க்கு குறையாமலும், 30க்கு மிகாமலும் இருக்க வேண்டும். மாத சம்பளம் ₹16,020 வழங்கப்படும். மருத்துவ நேர்முகம் உடற்கூறியல், முதலுதவி, அடிப்படை செவிலியர் பணி தொடர்பான மற்றும் மனித வளத்துறை நேர்முகத் தேர்வுகள் நடைபெறும். இந்த முகாம்களில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 50 நாட்கள் முழுமையான வகுப்பறை பயிற்சி அளிக்கப்பட்டு, பணியில் அமர்த்தப்படுவார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post 102, 108 ஆம்புலன்ஸ் பணியில் சேர வேலை வாய்ப்பு முகாம் appeared first on Dinakaran.

Tags : 108 Ambulance Recruitment Camp ,Namakkal ,102 ,108 Ambulances ,108 Ambulance Office ,Old Government Hospital Complex ,Namakkal Moganur Road… ,102, 108 Ambulance Recruitment Camp ,Dinakaran ,
× RELATED காதல் விவகாரத்தில் ஐடி ஊழியர் கொலை?