×
Saravana Stores

போக்குவரத்து விதிமீறிய 30 வாகனங்களுக்கு அபராதம்

 

நாமக்கல், நவ. 8: நாமக்கல் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன், மோட்டார் வாகன ஆய்வாளர் உமாமகேஸ்வரி ஆகியோர், நாமக்கல்-பரமத்திரோடு, கீரம்பூர் டோல்பிளாசா ஆகிய இடங்களில் நேற்று தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். சோதனையின் போது, ஓவர்லோடு ஏற்றி சென்ற 5 கனரக வாகனங்கள் உள்ளிட்ட 30 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டது. மேலும், வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட ஒரு லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

விதிமீறி இயக்கப்பட்ட வாகனங்களுக்கு ரூ.30 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டது. இதுகுறித்து தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன் கூறுகையில் ‘சோதனை அறிக்கை வழங்கப்பட்ட 30 வாகனங்களுக்கு, ரூ.1.90 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சாலை விதிமுறைகள் மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை மீறி இயக்கப்படும் வாகனங்கள் தணிக்கையின் போது பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது,’ என்றார்.

நாமக்கல்லில் வட்டார போக்குவரத்து அலுவலரின் சோதனையின் போது, வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட லாரி பறிமுதல் செய்யப்பட்டது. அந்த லாரி தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலக சாலையில் நிறுத்தி வைத்தபோது, மழையின் காரணமாக சாலையோரம் இருந்த பள்ளத்தில் லாரியின் டயர்கள் இறங்கிவிட்டது. இதனால் லாரியை வெளியே எடுக்க முடியவில்லை. இதையடுத்து கிரேன் வரவழைக்கப்பட்டு பல மணிநேர போராட்டத்துக்கு பின் லாரியை மீட்டு சாலைக்கு கொண்டு வந்தனர்.

The post போக்குவரத்து விதிமீறிய 30 வாகனங்களுக்கு அபராதம் appeared first on Dinakaran.

Tags : Namakkal ,South ,Regional Transport Officer ,Murugan ,Motor ,Inspector ,Umamakeshwari ,Namakkal-Paramathroad ,Kirambur Toll Plaza ,Dinakaran ,
× RELATED சாலையோரம் குப்பை கொட்டுவதை தடுக்க...