×
Saravana Stores

திமுக பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம்

 

பள்ளிபாளையம், நவ.8: குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திமுக பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம், மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில் தலைமையில், குமாரபாளையத்தில் நடந்தது. வடக்கு தெற்கு நகர நிர்வாகிகள், பாக முகவர்கள் கலந்து கொண்டனர். பள்ளிபாளையம் வடக்கு ஒன்றியம், படைவீடு பேரூர் பாக முவர்கள் கூட்டம், பல்லக்காபாளையம் முனியப்பன் கோயிலில் நடைபெற்றது.

பள்ளிபாளையம் மத்திய ஒன்றியம், திருச்செங்கோடு ஒன்றிய பாக முகவர்கள் கூட்டம், ஈ-காட்டூர் ஒன்றிய கட்சி அலுவலகத்திலும், பள்ளிபாளையம் தெற்கு ஒன்றியம், ஆலாம்பாளையம் பேரூர் பாக முகவர்கள் கூட்டம் அண்ணாநகர் சிங்கபெருமாள் கோயிலிலும் நடைபெற்றது.

இந்த கூட்டங்களில், ஈரோடு எம்பி பிரகாஷ் முன்னிலை வகித்தார். மாநில கொள்கை பரப்பு இணைச்செயலாளர் ஈரோடு சந்திரகுமார் பங்கேற்று சிறப்புரையாற்றினார். கூட்டத்தில், குமாரபாளையம் தெற்கு நகர பொறுப்பாளர் ஞானசேகரன், வடக்கு விஜயகண்ணன், பள்ளிபாளையம் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் நாச்சிமுத்து, தெற்கு இளங்கோவன், மத்தியம் செல்வம், பேரூர் செயலாளர்கள் ஆலாம்பாளையம் கார்த்திராஜ், படைவீடு ராமமூர்த்தி மற்றும் பாக முகவர்கள் கலந்து கொண்டனர்.

The post திமுக பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : DMK ,Pallipalayam ,Kumarapalayam Assembly Constituency ,Kumarapalayam ,West District ,Mathura Senthil ,North South City ,Dinakaran ,
× RELATED பள்ளிபாளையம் நகர மன்ற கூட்டம்