×

திருவெறும்பூர் அருகே தீப்பாஞ்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

 

திருவெறும்பூர், ஜூன் 3: திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு உள்ள தீப்பாஞ்சி அம்மன் ஆலய கும்பாபிஷேகம் நடைபெற்றது. திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு வடக்கு தெருவில் தீப்பாஞ்சி அம்மன் ஆலயம் உள்ளது. இக்கோயில் பரிவார தெய்வங்களான அய்யனார், பெரியண்ணசாமி, ஒண்டி கருப்பு, மதுரைவீரன், குதிரை, யானை மற்றும் நூதன கால கோபுர மகா கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு கடந்த 23ம் தேதி காப்பு கட்டுதல் மற்றும் யாகசாலை மூர்த்த கால் நடுதலுடன் துவங்கியது. 28ம் தேதி துவாக்குடி அய்யனார் கோயில் பூஜை, 29ம் தேதி காவிரி ஆற்றில் இருந்து புனிதநீர் எடுத்துவரப்பட்டது.
30ம் தேதி காலை அணுக்ஞை, கணபதி ஹோமம், விக்னேஸ்வர பூஜை, தன பூஜை, நவகிரக ஹோமமும்.

31ம் தேதி யாகசாலை நிர்ணயம், விக்னேஸ்வர பூஜை, முதல் கால யாகசாலை பூஜை, ஒன்றாம் தேதி இரண்டாம் கால மற்றும் மூன்றாம் கால யாகசாலை பூஜைகளும், இரண்டாம் தேதி காலை நான்காம் கால யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேக விழா விமரிசையாக நடந்தது. விழா ஏற்பாடுகளை சோழமாதேவி ஆலாண்டியம்மன் கோயில் அர்ச்சகர் தட்சிணாமூர்த்தி தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர். விழாவில் நவல்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

The post திருவெறும்பூர் அருகே தீப்பாஞ்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.

Tags : Deepanji Amman Temple ,Tiruverumpur ,Kumbabhishekam ,Thiruverumpur ,Nawalpattu ,Deepanji ,Amman Temple ,Nawalpattu North Street ,Ayyanar ,Periyannasamy ,Ondi ,
× RELATED திருவெறும்பூர் அருகே அனுமதியின்றி மது விற்ற 2 பேர் கைது