×

திருவெறும்பூர் அருகே அனுமதியின்றி மது விற்ற 2 பேர் கைது

 

திருவெறும்பூர், ஜுன் 5: கள்ளச்சந்தையில் அரசு மதுபாபனம் விற்பனை செய்த பழைய குற்றவாளி உட்பட 2பேரை போலீசார் கைது செய்தனர். திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் அம்மன் நகர் பகுதியில் கள்ளச்சந்தையில் அரசு மதுபான பாட்டில் விற்கப்பதாக திருவெறும்பூர் போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சப்இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் விரைந்து சென்றனர்.

அங்கு கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு மதுவிற்ற 2 பேரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். விசாரணையில், காட்டூர் வடக்கு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த கணேசன் (எ) சின்ன டைட் (48),காட்டூர் பாத்திமாபுரத்தை சேர்ந்த சேவியர் (56) என்பது தெரியவந்தது. போலீசார் அவர்களிடமிருந்து 150 குவாட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதில் கணேசன் (எ) சின்ன டை மீது கள்ளச்சந்தையில் மதுபானம், லாட்டரி விற்றது தொடர்பாக சுமார் 11 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.

The post திருவெறும்பூர் அருகே அனுமதியின்றி மது விற்ற 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Tiruverumpur ,Thiruverumpur ,Kattur Amman Nagar ,
× RELATED திருவெறும்பூர் அருகே குழந்தை தொழிலாளர் மீட்பு