×

கல்லக்குடியில் ஆம்புலன்ஸ் மோதி முன்னாள் விஏஓ பலி

 

லால்குடி, ஜூன் 15: கல்லக்குடியில் தனியார் ஆம்புலன்ஸ் வாகனம் மோதி ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அதிகாரி பலியானார்.திருச்சி மாவட்டம் கல்லக்குடி மால்வாய் பிரிவு ரோடு பகுதியில் வசித்து வருபவர் தர்மராஜ் (73). ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரி. இவர் தனக்கு சொந்தமான புதிய டூவீலரில் திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் கல்லக்குடி டோல்பிளாசாவில் உள்ள டீ கடைக்கு சென்றார். அப்போது, வலதுபுறம் திரும்பும்போது அவருக்கு பின்னால் வந்த திருச்சி தனியார் மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் அதிவேகமாக வந்து தர்மராஜ் டூவீலர் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டதில் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்தில் பலியானார். இதுகுறித்து தகவலறிந்த கல்லக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி லால்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை செய்ய அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குபதிந்து ஆம்புலன்ஸ் டிரைவர் திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை பர்மா காலனியை சேர்ந்த அப்புகுட்டி மகன் சரவணன் (44) என்பவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post கல்லக்குடியில் ஆம்புலன்ஸ் மோதி முன்னாள் விஏஓ பலி appeared first on Dinakaran.

Tags : VAO ,Kallakudy ,Lalgudi ,Kallakudi ,Dharmaraj ,Malwai Division Road, Kallakudi, Trichy district ,
× RELATED வடமாநில வாலிபர் சடலம் மீட்பு