×

கத்திமுனையில் ரூ.25 லட்சம் பறிப்பு: 5 பேர் கும்பலுக்கு வலை

கிருஷ்ணகிரி: சூளகிரி அருகே, 2 பேரை கத்திமுனையில் வழிமறித்து ரூ.25 லட்சத்தை பறித்து சென்ற 5 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். கர்நாடக மாநிலம் மங்களூரை சேர்ந்தவர்கள் மனோ (42), லிங்கராஜ் (40). கடந்த சில நாட்களுக்கு முன், ஓசூர் பகுதியை சேர்ந்த ஒருவர், இவர்களை ஆன்லைன் மூலமாக தொடர்பு கொண்டு ரூ.25 லட்சம் எடுத்து வாருங்கள். நான் உங்களுக்கு ரூ.30 லட்சமாக தருகிறேன் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை நம்பி மனோ மற்றும் லிங்கராஜ் ஆகியோர், ஒரு காரில் நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள சாமல்பள்ளம் அடுத்த கும்மனூருக்கு வந்தனர்.

அப்போது அங்கு 5 பேர், ஒரு காரில் வந்தனர்.அவர்கள் மனோ மற்றும் லிங்கராஜ் ஆகிய 2 பேரையும் கத்தி முனையில் மிரட்டி, அவர்கள் வைத்திருந்த ரூ.25 லட்சத்தை பறித்துக் கொண்டு காரில் தப்பிச் சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த சூளகிரி போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். ரூ.25 லட்சம் பணத்தை பறித்து சென்றதன் பின்னணியில் தொடர்பு உடையவர்கள் யார்? என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், பணத்தை பறித்த கும்பல் வந்த கார் குறித்து சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

 

The post கத்திமுனையில் ரூ.25 லட்சம் பறிப்பு: 5 பேர் கும்பலுக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Kathimoona ,Choolagiri ,Mano ,Lingaraj ,Mangalore, Karnataka ,Hosur ,
× RELATED சூளகிரி அருகே அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு