×

கொளத்தூர் அய்யனார் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்; திரளான பக்தர்கள் தரிசனம்

பாடாலூர்: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா கொளத்தூரில் ஸ்ரீஅய்யனார், ஸ்ரீ சுந்தரமூர்த்தி கோயில் உள்ளது. இங்கு திருத்தேர் பெருவிழா கடந்த 14ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. 21ம் தேதி 2ம் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. இதைத்தொடர்ந்து தினமும் அய்யனார் சுவாமி யானை, சிம்மம், மயில், காளை, குதிரை, வெட்டுக்குதிரை வாகனங்களில் எழுந்தருளி புறப்பாடு கண்டருளினார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடந்தது. அய்யனார், சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேரில் எழுந்தருளிய பின் பக்தர்கள் தேரை இழுத்து சென்றனர்.

இதில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர்.சிவசங்கர், கிளை செயலாளர் துரைமாணிக்கம், கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் கொளத்தூர் கிராமம் மட்டுமின்றி கொளக்காநத்தம், அணைப்பாடி, அயினாபுரம், திம்மூர், கூடலூர் போன்ற சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. தேரோட்டத்தையொட்டி அரியலூர் தீயணைப்பு துறையினர் மற்றும் மருவத்தூர் போலீசார், மின் ஊழியர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நாளை மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

The post கொளத்தூர் அய்யனார் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்; திரளான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Chariot ,Kolathur Ayyanar Temple ,Padalur ,Sri Ayyanar ,Sri Sundharamurthy ,Kolathur ,Aladhur Taluk ,Perambalur District ,Thiruther festival ,
× RELATED கமுதியில் அந்தோணியார் ஆலய தேர் திருவிழா கொடி ஏற்றத்துடன் துவக்கம்