வேதாரண்யம்: வேதாரண்யம் சன்னதி கடற்கரையில் கடந்த சில நாட்களாக அழகும் ஆப்தான ெஜல்லி மீன்கள் கரை ஒதுங்கி வருகின்றன. இதனால் பொதுமக்கள் இந்த மீன்களை தொட வேண்டாம் என வனத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் சன்னதி கடல் கடந்த மூன்று ஆண்டுகளாக சேறும் சகதியுமாக காணப்பட்டது. இதனால் தை அமாவாசை, ஆடி அமாவாசை, மகளாய அமாவாசை தினங்களில் இறந்தவர்களுக்கு திதி கொடுக்க வந்த பொதுமக்கள் அவதிப்பட்டனர். அவர்கள் கடலில் இறங்கி குளிக்க முடியாமல் திணறி வந்தனர். இந்நிலையில் கடந்த இரண்டு வாரத்தில் பெய்த மழையில் சேறு ஓரளவு உள்ளே இழுத்து செல்லப்பட்டது.
தற்போது குளிக்கும் அளவிற்கு கடல் உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக வேதாரண்யம் மணியன் தீவு, ஆறுகாட்டு துறை, புஷ்பவனம், கடற்கரை பகுதியில் விஷத்தன்மை கொண்ட ெஜல்லி மீன்கள் கரை ஒதுங்கி வருகின்றன. இந்த மீன்கள் பார்ப்பதற்கு அழகாக தண்ணீர் போல் வட்டமாக இருக்கும். இது தற்போது கடற்கரையோரம் ஆங்காங்கே ஒதுங்கியுள்ளது. இந்த மீன் மனிதர்கள் மீது பட்டால் அலர்ஜி ஏற்படும். உடல் முழுவதும் அரிப்பு ஏற்பட்டு புண் ஏற்படும். இதனால் கடற்கரைக்கு செல்லும் பொதுமக்கள் இந்த மீனை தொட வேண்டாம் எனவும், கடற்கரையில் குளிக்கும் பொழுது பாதுகாப்பாக குளிக்க வேண்டும் எனவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
The post வேதாரண்யம் கடற்கரையில் ஒதுங்கும் அழகும் ஆபத்தான ஜெல்லி மீன்கள்: அலர்ஜி ஏற்படும் அபாயம் appeared first on Dinakaran.