போச்சம்பள்ளி, மே 16: நாமக்கல் மாவட்டத்தில் கோழிப்பண்ணைகள் அதிகளவில் உள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் கோழி முட்டைகள், லாரி, டெம்போ மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மளிகை கடை, டிபார்மெண்ட் ஸ்டோர், கடைகளுக்கு மொத்தமாக விற்பனை செய்யப்படுகிறது. அதை சிறு வியாபாரிகள் வாங்கி சென்று சில்லரை விற்பனை செaய்து வருகிறார்கள். கடைகளில் ஒரு முட்டை ₹5.50 என விற்பனை செய்து வருகிறார்கள். தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பல கிராம புறங்களில் டெம்போ மூலம் வியாபாரிகள் கோழி முட்டைகளை டெம்போ மூலம் கிராம பகுதிகளுக்கு கொண்டு சென்று கூவி கூவி விற்பனை செய்து வருகிறார்கள். ஒரு முட்டை ₹3க்கு விற்பனை செய்து வருகிறார்கள். கடையை விட ₹2.50க்கு குறைவாக விற்பனை செய்யப்படுவதால், பொதுமக்கள் அதிகம் வாங்கி செல்கின்றனர்.
The post முட்டை விற்பனை ஜோர் appeared first on Dinakaran.