சூலூர், மே 15: சூலூர் அருகே உள்ள கள்ளப்பாளையம் பெருமாள் கோயில் வீதியைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (55). இவர் நேற்று முன்தினம் தனது வீட்டில் உள்ள டியூப் லைட்டை சரி செய்வதற்காக ஸ்விட்ச் போர்டில் சரி செய்து கொண்டு இருந்தார். அப்போது மின்சாரம் ஆப் செய்யாமல் ஒயரில் கை வைத்ததாக தெரிகிறது.
அப்போது அவர் மீது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டார். இதை பார்த்து வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் போன் செய்து வரவழைத்தனர். ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சுந்தர்ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக சுந்தர்ராஜன் தம்பி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிந்த போலீசார் உடலை கைப்பற்றி இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post வேணுகோபாலசாமி கோயில் புனரமைப்பு பணிக்கு அனுமதியின்றி: மின்சாரம் தாக்கியதில் ஒருவர் பலி appeared first on Dinakaran.