×

பிரஜ்வல் எங்கே இருக்கிறார் என தெரியவில்லை: கர்நாடக அமைச்சர் தகவல்

பெங்களூரு: முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், கர்நாடக மாநிலம் ஹாசன் மஜத எம்பியுமான பிரஜ்வலின் பாலியல் வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜெர்மனி தப்பிய பிரஜ்வலை பிடிக்க ப்ளூ கார்னர் நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சிஐடி சிறப்பு விசாரணை அதிகாரிகள் எம்பி பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்வதற்காக வெளிநாடு சென்றிருப்பதாக தகவல் வெளியானது.

இதுதொடர்பாக உள்துறை அமைச்சர் டாக்டர் ஜி பரமேஸ்வர் பெங்களூருவில் நிருபர்களிடம் கூறியதாவது:
பிரஜ்வல் ரேவண்ணா எங்கே இருக்கிறார் என்பது தெரியவில்லை. இன்டர்போல் போலீசார் உதவியை நாம் நாடியுள்ளோம். ப்ளூ கார்னர் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளதால் எந்த நாட்டில் பிரஜ்வல் ரேவண்ணா இருந்தாலும் அது பற்றிய தகவல் நமது நாட்டிற்கு கிடைத்துவிடும். பிரஜ்வல் கண்டுபிடிக்கப்பட்டால் , உடனே நமது அதிகாரிகள் விரைந்து சென்று அவரை கைது செய்து இந்தியா அழைத்து வருகிறார்கள். ஆனால், இதுவரை எம்பி பிரஜ்வல் எங்கே இருக்கிறார் என்பது தெரியவில்லை., என்றார்.

The post பிரஜ்வல் எங்கே இருக்கிறார் என தெரியவில்லை: கர்நாடக அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Prajwal ,Karnataka ,Bangalore ,Devakawuda ,Hassan Majatha ,Germany ,CID ,
× RELATED பாலியல் புகார் பிரஜ்வல் போலீஸ்காவல்...