கோவை, மே 11: கோவை ராமலிங்கம் காலனியை சேர்ந்த மாணிக்கம். நல்லாசிரியர் விருது பெற்றவர். இவர் உடல் நிலைக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார். மேலும், கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு தனது உடலை தானம் செய்திருந்தார். அதன்படி, அவரது இறப்புக்கு பிறகு அவரின் உடல் மருத்துவ மாணவர்களின் படிப்பிற்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரிக்கு தானமாக அளிக்கப்பட்டது. தவிர, அவரது கண்கள் மற்றும் தோல் ஆகியவை கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தானமாக அளிக்கப்பட்டது.
The post நல்லாசிரியர் விருது பெற்றவர் உடல் தானம் appeared first on Dinakaran.