×
Saravana Stores

பிளஸ் 2 தேர்வில் 91.87 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி

கிருஷ்ணகிரி, மே 7: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 91.87 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 2.83% அதிகமாகும். தேர்ச்சி விகிதத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம், மாநில அளவில் 33வது இடத்தை பிடித்துள்ளது. தமிழகம் முழுவதும் பிளஸ்2 அரசு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, பிளஸ்2 தேர்வு முடிவுகளை வெளியிட்டார். மாவட்டத்தில் 18 ஆயிரத்து 874 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 தேர்வை எழுதினர். இதில் 17 ஆயிரத்து 339 பேர் தேர்வு பெற்றுள்ளனர். இது 91.87 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 89 சதவீதமாக இருந்தது. இந்த ஆண்டு 2.87 சதவீதம் அதிகரித்துள்ளது. தேர்வு எழுதிய 8 ஆயிரத்து 732 மாணவர்களில், 7 ஆயிரத்து 801 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 89.34 சதவீதம் ஆகும். தேர்வு எழுதிய 10 ஆயிரத்து 142 மாணவிகளில், 9 ஆயிரத்து 538 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 94.04 சதவீதம் ஆகும்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 107 அரசு பள்ளிகளில் 5,329 மாணவர்களும், 6,915 மாணவிகளும் என மொத்தம் 12,244 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். அதில் 4,462 மாணவர்களும், 6,350 மாணவிகளும் என மொத்தம் 10,812 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 83.73 சதவீதமும், மாணவிகள் 91.83 சதவீதமும் என மொத்தம் 88.3 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், 6 அரசு பள்ளிகள், 2 உதவி பெறும் பள்ளிகள், 42 தனியார் பள்ளிகள் என மொத்தம் 50 பள்ளிகள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. சந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, உனிசெட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, பெருகோபனப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி, தொகரப்பள்ளி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, பெரியசதள்ளப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி, கிருஷ்ணகிரி அரசு மாதிரி பள்ளி என மொத்தம் 6 பள்ளிகளும், கிருஷ்ணகிரி புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி, பர்கூர் கன்கார்டியா மேல்நிலைப்பள்ளி ஆகிய பகுதி உதவி பெறும் 2 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.

மேலும், பர்கூர் வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, விஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கிருஷ்ணகிரி விஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, டிரினிடி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, டி.கே.சாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கேம்பிரிட்ஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மகரிஷி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீவித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஓசூர் வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அச்சீவர்ஸ் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மவுண்ட் கார்மெல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பகவான் ஸ்ரீராமகிருஷ்ணா பரமஹம்சா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. தேன்கனிக்கோட்டை ஹோலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஊத்தங்கரை வித்யா விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஆர்.பி.எஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கொட்டாவூர் அசோக் மெஷன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வி.மாதேப்பள்ளி ஸ்ரீமாருதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கல்லாவி விஸ்டம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அரசம்பட்டி ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஒன்னல்வாடி புனித அகஸ்டின் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வரட்டம்பட்டி நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.

அதே போல், பெரியபனமுட்லு ஏ.இ.எஸ்.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சேசுராஜபுரம் புனித ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பிஆர்ஜி.மாதேப்பள்ளி செல்வா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மரிக்கம்பள்ளி எஸ்விசி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பாரண்டப்பள்ளி எம்ஜிஎம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அலசநத்தம் ஸ்ரீபாரதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, எலச்சியூர் எஸ்ஆர்எஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மிட்டப்பள்ளி மேரி வார்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பாகலூர் ஆதித்யா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மல்லப்பாடி விக்டோரியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கெண்டிகம்பட்டி குணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகியவை 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.  கந்திகுப்பம் கிங்ஸ்லி கார்டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சி.தம்மாண்டரப்பள்ளி புனித தாமஸ் பிர்லியண்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பூனப்பள்ளி நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பேரிகை ஸ்ரீவித்யபாரதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, போச்சம்பள்ளி அண்ணா அறிவகம் மேல்நிலைப்பள்ளி, சிங்காரப்பேட்டை மதர்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ராயக்கோட்டை இட்டர்னல்லைட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கொல்லப்பட்டி கிரிஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஆவலப்பள்ளி ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய தனியார் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.

வேப்பனஹள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 46.81 சதவீதமும், பர்கூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 62.26 சதவீதமும், கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 70.88 சதவீதமும் என குறைந்த சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள் பட்டியலில் முதல் 3 இடங்களை பிடித்துள்ளது.

The post பிளஸ் 2 தேர்வில் 91.87 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Krishnagiri district ,Dinakaran ,
× RELATED ஓசூரில் தனியார் பள்ளி மாணவியை...