×
Saravana Stores

டெல்லியை மீண்டும் வீழ்த்தி பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்யுமா ராஜஸ்தான்?


டெல்லி: ஐபிஎல் டி20 தொடரின் 56வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. ரிஷப் பன்ட் தலைமையிலான டெல்லி அணி பிளே ஆப் வாய்ப்பை தக்கவைக்க வெற்றி அவசியம். அந்த அணி இதுவரை விளையாடிய 11 ஆட்டங்களில் 5 வெற்றி, 6 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. எஞ்சியுள்ள 3 ஆட்டங்களில் வென்றாலும் மற்ற அணிகளின் வெற்றி/தோல்விகளை பொறுத்தே டெல்லிக்கு பிளே ஆப் வாய்ப்பு வாய்க்கலாம். ஏப்.29ல் கொல்கத்தாவிடம் தோற்ற டெல்லி, நீண்ட இடைவெளிக்கு பிறகு இன்று விளையாட உள்ளது. அந்த ஓய்வு ராஜஸ்தான் அணிக்கு பதிலடி தர உதவலாம். சொந்த களத்தில் விளையாடுவது கூடுதல் பலம்.

அதே சமயம், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் நடப்பு சீசனில் அமர்க்களமாக விளையாடி அசத்தி வருகிறது. அந்த அணி விளையாடிய 10 லீக் ஆட்டங்களில் 2 தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளது. பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற, எஞ்சியுள்ள 4 ஆட்டங்களில் ஒரு வெற்றியே போதுமானது என்ற அளவுக்கு ராஜஸ்தான் வசதியான இடத்தில் வாகாக அமர்ந்துள்ளது. கடைசியாக சன்ரைசர்சுடன் மோதிய போட்டியில் கூட அந்த அணி கடைசி பந்தில் ஒரு ரன் வித்தியாத்தில் மட்டுமே வெற்றி வாய்ப்பை பறிகொடுத்தது குறிப்பிடத்தக்கது. இரு அணிகளுமே வெற்றி முனைப்புடன் வரிந்துகட்டுவதால், இன்றைய ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.

* இரு அணிகளும் 28 முறை மோதியதில் ராஜஸ்தான் 15-13 என முன்னிலை வகிக்கிறது.

* நடப்புத் தொடரில் மார்ச் 28ல் நடந்த 9வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் 12 ரன் வித்தியாசத்தில் தான் டெல்லியை வென்றது.

* கடைசியாக மோதிய 5 ஆட்டங்களிலும் 3-2 என்ற கணக்கில் ராஜஸ்தான் கையே ஓங்கியுள்ளது.

The post டெல்லியை மீண்டும் வீழ்த்தி பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்யுமா ராஜஸ்தான்? appeared first on Dinakaran.

Tags : Rajasthan ,Delhi ,IPL T20 ,Delhi Capitals ,Rajasthan Royals ,Rishabh Pant ,Dinakaran ,
× RELATED சமரசம் செய்து கொண்டதால் பாலியல்...