×

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக ஜே.பி.நட்டா மீது தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்

பெங்களூரு: கர்நாடகாவில் ஓபிசி பிரிவில் முஸ்லீம் சமூகத்தை சேர்க்கும் காங்கிரஸ் அரசின் முடிவை பாஜ கடுமையாக விமர்சித்துவரும் நிலையில், அதை சுட்டிக்காட்டி விமர்சிக்கும் விதமாக, கர்நாடக மாநில பாஜ டிவிட்டரில் ஒரு வீடியோவை பதிவிட்டிருந்தது. அந்த வீடியோவில், 3 சிறிய முட்டைகள் இருக்கின்றன. அவை ஓபிசி, எஸ்.சி, எஸ்.டி ஆகிய பிரிவுகள் ஆகும். அதற்கு அருகில் ராகுல் காந்தியும் சித்தராமையாவும் சேர்ந்து ஒரு பெரிய முட்டையை வைக்கின்றனர்.

அந்த முட்டை குறிப்பிட்ட சமூகத்தை குறிப்பிடும் வகையில் உள்ளது. குறிப்பிட்ட மதத்திற்கே அனைத்து நிதியையும், சலுகைகளையும் வழங்கி காங்கிரஸ் கட்சி பலப்படுத்துவதாகவும், கடைசியில் அந்த பெரிய முட்டை, 3 சிறிய முட்டைகளையும் இட ஒதுக்கீட்டிலிருந்து மொத்தமாக தூக்கி எறிவதாகவும் அந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநில பாஜ டிவிட்டர் பக்கத்தை அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மாநில தலைவர் விஜயேந்திரா ஆகியோர் வழிகாட்டுதலின்படி, பாஜ மாநில ஐடி பிரிவு தலைவர் அமித் மாளவியா தான் நிர்வகிக்கிறார்.

எனவே தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அவர்கள் மீது தலைமை தேர்தல் அதிகாரியிடம் காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளது.  இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சி அளித்துள்ள புகாரில், ஓபிசி பிரிவில் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ப்பதாக பாஜ பொய்யான பிரசாரம் மேற்கொள்கிறது. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் அப்படியான எந்த அம்சமும் இல்லை. எனவே பொய் பிரசாரம் மேற்கொள்ளும் ஜே.பி.நட்டா மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளனர்.

The post தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக ஜே.பி.நட்டா மீது தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார் appeared first on Dinakaran.

Tags : Congress ,Election Commission ,JP Natta ,BENGALURU ,BJP ,Congress government ,OBC ,Karnataka ,Twitter ,
× RELATED மும்பை வடமேற்கு தொகுதியில் EVM-ல்...