×

செவ்வாய் எங்கு இருந்தால் என்ன செய்வார்?

ALP லக்னத்திற்கு, 7ம் பாவகத்தில் செவ்வாய் இருப்பவர்கள், தனக்கு இப்படிப்பட்ட வாழ்க்கை துணைதான் வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் அல்லது அழகு, அந்தஸ்து, படிப்பு போன்றவற்றின் மூலம் எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்துவர். கணவன், மனைவியிடையே ஈகோ பிரச்னைகள் தலைதூக்கும். ஒருவரை ஆளுமை செய்ய மற்றவர் நினைப்பர். தனக்கு கட்டுப்பட்டு இருக்க வேண்டும் என்கின்ற எதிர்பார்ப்பும், ஆதிக்க குணமும் அதிகமாக இருப்பதால், பிரச்னைகள் அதிகரிக்கும். அதிகார நோக்கம் இருப்பதால், அடக்கி ஆளும் குணம் இருப்பதால், எதிர்பாலினத்தவரிடையே பிரச்னைகள் அதிகமாகும். நண்பர்களிடமும் ஒத்துப்போக மாட்டார்கள்.

அதனால், நண்பர்கள் பெரிய அளவில் இருக்கவும் மாட்டார்கள். கூட்டு முயற்சிகளும் இவர்களுக்கு உதவாது. ALP லக்னத்தில் இருந்து, 8ம் பாவகத்தில் செவ்வாய் இருப்பவர்கள், மங்களகாரகன் என்று சொல்லக்கூடிய செவ்வாய், 8ல் இருப்பதால், மாங்கல்ய தோஷம் என்று சொல்வார்கள். மாங்கல்ய பலத்தை தரக்கூடிய இடத்தில் செவ்வாய் இருப்பதால், மாங்கல்ய தோஷம் என்றும் அழைக்கப்படும். எதிர்பாராத விபத்துகளையும், கண்டங்களையும் ஏற்படுத்தும். கணவன், மனைவி ஒருத்தரை ஒருத்தர் காயப்படுத்திக்கொண்டு, அவமானங்களையும், அவப்பெயர்களையும், அடுத்தவர்கள் மீது பழி சொல்லுதலுக்கும் ஆட்படுவார்கள்.

மற்றவரை தண்டிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், தற்கொலை முயற்சியிலும் ஈடுபடுவார்கள். கோர்ட், கேஸ் போன்ற நிகழ்வுகளையும் சந்திக்க நேரிடும், தவறான சிந்தனைகள் மேலோங்கும். ALP லக்னத்திலிருந்து 12ம் பாவகத்தில் செவ்வாய் இருப்பவர்கள், மனைவியோ அல்லது கணவனோதான் பிரச்னையாக இருப்பார்கள். அவர்களிடமிருந்து தப்பிக்க வெளிநாடு அல்லது வெளியூர் சென்று வசிக்க நேரிடும். சேர்ந்து இருக்கக்கூடிய சூழ்நிலை இருப்பின், கண்டிப்பாக அவர்கள் பிரிந்து வாழக்கூடிய சூழ்நிலை உருவாகும். அயன, சயன, போகம் கெடும், இரவு நேரங்களில்தான் இவர்களுக்கிடையே கருத்து மோதல்கள் அதிகரிக்கும். இவையே, செவ்வாய் தோஷம் இருந்தால் ஏற்படும் விளைவுகள் ஆகும்.
இவை குறிப்பிட்ட காலங்களுக்கு மட்டுமே அதீத பாதிப்பை, அட்சய லக்னத்திற்கு செவ்வாய் 2,4,7,8,12ல் நின்று, செவ்வாய் தசாவும் நடக்குமானால், மேற்கண்ட விளைவுகளை சந்திப்பார்கள். அவர்களுக்கு மட்டுமே செவ்வாய் தோஷம் பொருத்தம் பார்க்கப்பட வேண்டும். (வளரும்!)

கிரி ஜானகிராமன்

The post செவ்வாய் எங்கு இருந்தால் என்ன செய்வார்? appeared first on Dinakaran.

Tags : Mars ,ALP ,Ascendant ,Dinakaran ,
× RELATED துல்லியமாக கண்டறியும் தோஷங்கள்