×

தேர்தல் ஆணையத்துக்கு எதிராக பிடிபி போராட்டம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக்-ரஜோரி மக்களவை தொகுதிக்கு மூன்றாவது கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. இதனை தொடர்ந்து 7ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவேண்டிய நிலையில் வருகிற 25ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் செவ்வாயன்று அறிவித்தது. இதற்கு ஜம்மு காஷ்மீரில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் மக்கள் ஜனநாயக கட்சி சார்பாக தேர்தல் தேதியை மாற்றி அறிவித்துள்ள தேர்தல் ஆணையத்துக்கு எதிராக நேற்று போராட்டம் நடத்தப்பட்டது.

The post தேர்தல் ஆணையத்துக்கு எதிராக பிடிபி போராட்டம் appeared first on Dinakaran.

Tags : PDP ,Election Commission ,Srinagar ,Anantnag-Rajori Lok Sabha ,Jammu and Kashmir ,Dinakaran ,
× RELATED ஜாதி, மதம், மொழி ரீதியாக வாக்குகள்...