×

பெரம்பலூர் மாவட்ட அளவிலான கோடை கால பயிற்சி முகாம் துவக்கம்

பெரம்பலூர்,மே.1: பெரம்பலுார் மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம் தொடங்கியது. வெயில் காரணமாக குறைவானவர்களே பங்கேற்றனர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், பெரம்பலூர் மாவட்ட விளையாட்டுப் பிரிவின் சார்பாக, மாவட்ட அளவி லான கோடைகால பயிற்சி முகாம் 2024ம் ஆண்டிற்கு, பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத் தில் ஏப்- 29ம் தேதி முதல் மே-மாதம் 13ம்தேதி வரை நடைபெறுகிறது. இந்த மாவட்ட அளவிலான கோடைகாலப் பயிற்சி முகாமில் டேக்வாண்டோ, கைப்பந்து, தடகளம், இறகு பந்து மற்றும் மேசைப்பந்து ஆகிய விளையாட்டுகளு க்கு பயிற்சியாளர்களைக் கொண்டு பயிற்சிகள் நடை பெறவுள்ளது.

பயிற்சி முகாமில் பள்ளி, கல்லூரியில் பயிலும் மாணவர் மற்றும் மாணவரல்லாத 18 வயதிற்குக் கீழ் உள்ள இளைஞர்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருந் தது. இருந்தும் கடுமை யான வெயில்காரணமாக பெரம்பலூர் மாவட்ட அளவில் மிகக் குறைவான இளைஞர்கள்,இளம்பெண்களே பங்கேற்று பயிற்சி பெற்று வருகின்றனர். பயிற்சி முடிவடைந்த பிறகு கலந்து கொண்ட அனைவருக்கும் பங்கு பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப் படும் என்பது குறிப்பிடத் தக்கது.

The post பெரம்பலூர் மாவட்ட அளவிலான கோடை கால பயிற்சி முகாம் துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Perambalur district ,Perambalur ,Tamil Nadu Sports Development Authority ,Perambalur District Sports Department ,training ,Dinakaran ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட தாலுகாக்களில்...