கோவை, ஏப்.29: கோவை தடாகம் ரோட்டில் உள்ள ஜிசிடி கல்லூரி வளாகத்தில் கோவை பாராளுமன்ற தேர்தலில் ஓட்டுப்பதிவின்போது பயன்படுத்திய ஓட்டு மெசின்கள், கட்டுப்பாட்டு கருவிகள், விவி பேட் கருவிகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த பகுதி ஸ்டிராங்க் ரூம்களை கண்காணிப்பு கேமரா மூலமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்த பகுதியில் ஓட்டு மெசின்களின் பாதுகாப்புகளை கருத்தி கொண்டு ஜிசிடி கல்லூரி வளாகம், சாயிபாபா காலனி, வெங்கிட்டாபுரம், வேலாண்டிபாளையம், இடையர்பாளையம், வடகோவை, ஆர்.எஸ்.புரம், பூசாரிபாளையம், சீரநாயக்கன்பாளையம், வடவள்ளி, பி.என்.புதூர் மற்றும் பல்வேறு சுற்றுவட்டார பகுதிகள் ரெட் ஜோன் என்ற சிவப்பு மண்டல பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கே டிரோன் பறக்க அனுமதி கிடையாது. ஓட்டு எண்ணிக்கை நாள் வரை ஓட்டு மெசின்களின் பாதுகாப்பிற்காக டிரோன் தடை இருக்கும் என மாநகர போலீசார் தெரிவித்துள்ளனர். தடையை மீறி இங்கே யாராவது டிரோன் பறக்க விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் அறிவித்துள்ளனர்.
The post ஓட்டு மெசின் வளாகத்தில் டிரோன் பயன்படுத்த தடை appeared first on Dinakaran.