போச்சம்பள்ளி, ஏப்.28: போச்சம்பள்ளி அருகே, என்.தட்டக்கல் பகுதியில் உள்ள காட்டு பகுதிகளில் நேற்று தேவாங்கு ஒன்று அடிப்பட்ட நிலையில் இருந்தது. இதை பார்த்த சிவகுரு என்பவர் அதை மீட்டு, அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு எடுத்து சென்று முதலுதவி சிகிச்சை அளித்தார். பின்னர், கிருஷ்ணகிரி வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து வனத்துறையினர் நேரில் வந்து அடிப்பட்ட நிலையில் இருந்த தேவாங்கை மீட்டு சென்றனர். கோடை ஏற்பட்டுள்ள வறட்சியின் காரணமாக, வனப்பகுதியில் போதிய தண்ணீர், உணவு கிடைக்காமல் வன விலங்குகள் வெளியே வருகிறது. எனவே, வனவிலங்குகளுக்கு தேவையான உணவு, தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post காயத்துடன் தேவாங்கு மீட்பு appeared first on Dinakaran.