ஊத்தங்கரை, ஏப்.27: ஊத்தங்கரை அடுத்த கதவணி கிராமத்தில், குடிநீர் பிரச்னை தொடர்பாக, நேற்று முன்தினம் பொதுமக்கள் சேலம் – திருப்பத்தூர் நெடுஞ் சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து கதவணி கிராம நிர்வாக அலுவலர் முருகன், ஊத்தங்கரை போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலை மறியலில் ஈடுபட்டதாக கதவணி துணைத்தலைவர் பிரபு மற்றும் குமார், சேட்டு, முருகன், சென்னப்பன், விஜயலட்சுமி, வளர்மதி, மாலதி, அலமேலு, வடிவேலு, சாந்தி, ராமதாஸ், பொன்னுரங்கன் உள்ளிட்ட 35 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post மறியலில் ஈடுபட்ட 35 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.