- திறப்பு விழா
- மார்பக புற்றுநோய் நோயறிதலுக்கான சிறப்பு மருத்துவ
- ஓசூர்
- செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவ கல்லூரி
- பட்டாப்பள்ளி
- கிருஷ்ணகிரி
- தின மலர்
ஓசூர், ஏப்.21: ஓசூர் பத்தலபள்ளியில் இயங்கி வரும் செயின்ட் பீட்டர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கிருஷ்ணகிரி மற்றும் அதன் அண்டை மாவட்ட மக்களுக்கு சிறப்பான மருத்துவ சேவையை அளித்து வருகிறது.
இந்த மருத்துவமனையில் மகளிருக்கான சிறப்பான மருத்துவ சேவையை அளிக்கும் வகையில், மார்பக புற்றுநோய் கண்டறியும் மெமோகிராம், ப்ளூரோஸ்கோபி போன்ற நவீன மருத்துவ உபகரணங்களை உள்ளடக்கிய மருத்துவ பிரிவை, ஓசூர் மாநகராட்சி மருத்துவ அலுவலர் பிரபாகர் தொடங்கி வைத்தார். விழாவில், ஓசூர் மண்டல தொழிலாளர் நல மருத்துவமனை மருத்துவ கண்கணிப்பாளர் கீதா, தனியார் நிறுவன மனித வள மேலாளர் கௌரி, மருத்துவ இயக்குனர் ராஜா முத்தைய்யா, கல்லூரி முதல்வர் சோமசேகர், மருத்துவ கண்காணிப்பாளர் வாசுதேவா, ஆர்எம்ஓ மருத்துவர் பார்வதி மற்றும் மருத்துவர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்து
கொண்டனர்.
The post மார்பக புற்றுநோய் கண்டறியும் சிறப்பு மருத்துவ பிரிவு தொடக்க விழா appeared first on Dinakaran.