×

துபாய் வெள்ளத்தில் மகன் உயிரிழந்த துக்கத்திலும் பயணத்தை ஒத்தி வைத்து வாக்களித்த குடும்பத்தினர்

 

பெரம்பலூர்,ஏப்.20: துபாயில் வெள்ளத்தில் மகன் உயிரிழந்த துக்கத்திலும், துபாய் செல்லும் பயணத்தை ஒத்தி வைத்துவிட்டு, பெரம்பலூரில் தந்தை, தாய், குடும்பத்தினருடன் வந்து வாக்களித்து ஜனநாயகக் கடமையை ஆற்றினர். பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுக்கா, பூலாம்பாடி அருகே உள்ள மேலக்குணங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் அப்துல் லத்தீப்(75).இவரது மகன் அப்பாஸ் (50). கடந்த சில வருடங்களுக்கு முன்பே துபாய்க்கு சென்றுவிட்டார்.

இந்நிலையில் அப்பாஸின் அப்பா அப்துல் லத்தீப், அம்மா ரஹிமாபி (65), சகோதரி மதினாபேகம் (42),ஆகியோர் பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையில் மக்கா பள்ளி வாசல் அருகே ஆசியா நகரில் வசித்து வருகின்றனர்.இந்நிலையில் துபாயில் உள்ள அப்பாஸ் கடந்த 16ம் தேதி செவ்வாய்க் கிழமை இரவு வரலாறு காணாத மழை வெள்ளத் தின் போது உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்து விட்டார். இது பற்றிய தகவல் அப்துல் லத்தீப் குடும்பத்திற்கு 17ம் தேதி மதியம் தான் தெரிய வந்துள்ளது.

மகன் இறந்த துக்கத்தில் இன்னும் மகனின் உடல் அடக்கம் செய்யப்படாத நிலையில், நேற்று எளம்பலூர் சாலையில் ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப் பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்திற்கு, அப்துல் லத்தீப் தனது மனைவி ரஹிமா பி, மகள் மதினா பேகம், ஆகியோருடன் குடும்பமாக வந்து வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளனர்.காலில் ஆறாத புண்ணின் காரணமாக நடக்க முடியாமல் அவதிப்பட்ட அப்துல் லத்தீப், வீல் சேரில் வந்து வாக்களித்துவிட்டுச் சென்றார்.

The post துபாய் வெள்ளத்தில் மகன் உயிரிழந்த துக்கத்திலும் பயணத்தை ஒத்தி வைத்து வாக்களித்த குடும்பத்தினர் appeared first on Dinakaran.

Tags : Dubai ,Perambalur ,Melakkunangudi ,Phoolampady, Vepanthatta taluk ,Dinakaran ,
× RELATED துபாய் நாட்டில் மண்ணிட்டு மூடிய...