×

அதிமுக அழிந்து போகும்னு சொல்ல அவரு ஜோசியரா? கிழி கிழியென கிழித்து விட்டேன்… அண்ணாமலை சும்மா… சுஜூபி… காமெடி பீசு பத்தி ஏன் பேசணும் செல்லூர் ராஜூ டார்…டார்…

மதுரை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் டாக்டர் சரவணனை ஆதரித்து வடமாநில வணிகர்கள் சங்கத்தினரிடம் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வாக்கு சேகரித்த பின் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாட்டில் பாஜவிற்கு செல்வாக்கு இல்லை. பாஜவுக்கு போடும் ஓட்டுகள் வீணாகி விடும். தமிழ்நாட்டில் திமுக, அதிமுக மட்டுமே களத்தில் உள்ளன என்று இந்த வடமாநில வணிகர்கள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டை திராவிட இயக்கங்களே மாறி மாறி ஆண்டு கொண்டிருக்கின்றன. திராவிட இயக்கம் தான் ஏழை, எளிய மக்களுக்கான பல திட்டங்களை செயல்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டின் திட்டங்களைத்தான் மற்ற மாநிலங்கள் பின்பற்றுகின்றன. தமிழ்நாட்டில் சாலை வசதி, தடையற்ற மின்சாரம், சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு உள்ளது. தொழில் துறையில் தமிழ்நாடு முதல் மாநிலமாக உள்ளது. பெரிய தொழில்களில் மகாராஷ்டிராவிற்கு பிறகு தமிழ்நாடுதான் இருக்கிறது. இங்கே விட நிறைய ஊழல் அங்கே நடந்து கொண்டிருக்கிறது. அண்ணாமலையின் மறுபிறவியாக அமித்ஷா பேசி வருகிறார். அதிமுக அழிந்து போகுமென அண்ணாமலை சொல்கிறார். அணணாமலைக்கு நான் பல பதிலடிகள் கொடுத்து விட்டேன். அண்ணாமலை என்ன ஜோசியரா?. அதிமுக அழியும் எனச் சொல்ல அவர் என்ன விஸ்வாமித்திரரா?.

திடீரென பாஜ மாநில தலைவராக நியமித்த பிறகே அவரைத் தெரியும். அவருக்கு அரசியலே தெரியாது. அண்ணாமலை கூற்று வேடிக்கையானது, நகைச்சுவையானது. அவர் நகைச்சுவையாளராக (காமெடி பீசு) மாறிவிட்டார். கோவையில் தோல்வி பயத்தை மறைக்க இப்படி பேசி வருகிறார். அவர் பேசட்டுமே?. எத்தனை நாளைக்கு? தேர்தலுக்கு ஒரு வாரம் தான் இருக்கிறது. ஜூன் 4ம் தேதிக்கு பிறகு அண்ணாமலை எங்கே இருக்கிறார் என பார்ப்போம். இந்த அண்ணாமலை மட்டுமல்ல. எத்தனை மலைகள் வந்தாலும் பிரச்னை இல்லை. அண்ணாமலை என்ற பெயரால் அவர் ஒன்றும் சூப்பர் ஸ்டார் கிடையாது. இவரு சும்மா சுஜூபி. அவரைப்பற்றி ஏற்கனவே கிழி கிழியென கிழித்து விட்டேன்’’ என்றார்.

* மோடி, அமித்ஷா ரோடு ஷோல ஆளே இல்ல…
செல்லூர் ராஜூ கூறுகையில், ‘ரோடுஷோ’ என்று தேவையில்லாமல் கூட்டி வந்து, பிரதமர் மோடியின் செல்வாக்கை அண்ணாமலை ஒன்றுமில்லாமல் ஆக்கி விட்டார். தமிழ்நாட்டில் அதிகம் மக்கள் கூடும் இடம் பாண்டி பஜார்தான். அங்கேயே கூட்டமில்லை. மோடி ரொம்பவும் வருத்தத்தில் இருப்பாரு. மதுரையில் அமித்ஷா ரோடுஷோ நடத்தினார். அருகில் வேங்கட அய்யங்கார் தெருவில்தான் கட்சி வேலையாக நின்றிருந்தேன். பாவம் அந்தவழியாக சைரன் போட்டு, கையை கையை ஆட்டிட்டு போகும் அமித்ஷாவை சாலையில் நின்று டீ குடித்தவர் கூட திரும்பி பார்க்கவில்லை’ என்றார்.

The post அதிமுக அழிந்து போகும்னு சொல்ல அவரு ஜோசியரா? கிழி கிழியென கிழித்து விட்டேன்… அண்ணாமலை சும்மா… சுஜூபி… காமெடி பீசு பத்தி ஏன் பேசணும் செல்லூர் ராஜூ டார்…டார்… appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Former Minister ,Sellur Raju ,Northern States Merchants Association ,Dr. ,Saravanan ,Madurai ,BJP ,Tamil Nadu ,Annamalai ,Sujubi ,
× RELATED திமுக பெண் நிர்வாகியின் வீடியோ பதிவை...