×
Saravana Stores

பாஜவுக்கு ஆதரவாக செயல்பட்ட எடப்பாடியிடம் புகார் இளைஞரணி நிர்வாகியை மிரட்டிய செல்லூர் ராஜூ: ஆடியோ வைரல்

மதுரை: ‘‘நீயெல்லாம் ஒரு ஆளாடா… தொலைச்சுப்புடுவேன்…’ என்று எடப்பாடியிடம் புகார் அளித்த அதிமுக இளைஞரணி நிர்வாகியை, செல்லூர் ராஜூ மிரட்டிய ஆடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் மதுரை தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணனுக்கு எதிராக செல்லூர் ராஜூ செயல்பட்டு, மூன்றாம் இடத்திற்கு அதிமுக சென்று விட்டதாக, மதுரை வந்த எடப்பாடி பழனிசாமியிடம், அதிமுக எம்ஜிஆர் இளைஞரணி நிர்வாகி ராமசுப்பிரமணியன் புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இவர் செல்லூர் ராஜூவின் முன்னாள் உதவியாளர். இருவரும் பேசிக்கொள்ளும் ஆடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இருவரது பேச்சுகள் வருமாறு:
செல்லூர் ராஜூ: ஒரு இடத்துல விசுவாசமா இருந்திருக்கியாடா? ராமசுப்பிரமணியன்: 2021 எலக்சன் வேலை பார்த்துக்கிறோம். செல்லூர் ராஜூ: கிழிச்ச நீ. தினகரனிடம் போயிட்டியடா… எங்கிட்ட வேலைக்கு கேட்ட, வேலைக்கு வர வேண்டாம்னு சொல்லிட்டேன். ராமசுப்பிரமணியன்: உங்ககிட்டே யாரு வேலை கேட்டா. செல்லூர் ராஜூ: நீதானே கேட்ட. தொலைச்சிப்புடுவேன். திருப்பரங்குன்றத்துலயே அங்க வேலை பார்த்துக்க வேண்டியதுதானே? ராமசுப்பிரமணியன்: முதல்ல கூட வச்சிருந்தப்போ தெரியாதா? செல்லூர் ராஜூ: தொலைச்சிப்புடுவேன்… பார்த்துக்க.. என்ன புடுங்குற.. கட்சிக்காரனுக்கு தெரியும் நான் வேலை பார்த்தேன், பார்க்காதது.
ராமசுப்பிரமணியன்: இங்கே வந்து வேலை பார்த்தபோதே திருப்பரங்குன்றத்துல வேலை பாருன்னு சொல்லியிருக்கணும்..

செல்லூர் ராஜூ: என்னைக்கு நீ வந்து வேலை செஞ்ச? ஒருநாளு ஒரு பகுதிக்கு வந்தியாடா? ராமசுப்பிரமணியன்: ஏன் கவுண்டிங் ஏஜென்டுக்கு படம் கேட்டீங்க… செல்லூர் ராஜூ: உன்னிடம் எதுக்கு போட்டோ கேட்கிறேன்னா… கட்சிக்காரனாடா? நீ விசுவாசியாடா? கம்யூனிஸ்ட்காரன்டா. ராமசுப்பிரமணியன்: அப்புறம் எதுக்கு என்னை கூட வச்சிருந்தீங்க.. வந்து 18 வருசம் ஆச்சு, பழைய கதையெல்லம் பேசிட்டு இருக்காதீங்க.. செல்லூர் ராஜூ: உன் வீட்டுக்கு வேலை வாங்கிக் கொடுத்தது நான்தான்.. ராமசுப்பிரமணியன்: நீங்களா? நீங்க கிடையாது. சிஎம் செல்ல இருந்து வந்தது. செல்லூர் ராஜூ: யாரு சொன்னான்னு எங்களுக்குத்தான்டா தெரியும்.. ஆமா கிழிச்ச.. முதல்லயே தெரியும். அதானலதான் விரட்டி விட்டேன். ராமசுப்பிரமணியன்: தொண்டர்களிடம் அடிக்கும் கெள்ளையை பார்த்து நாங்க வேணாம்னு வந்துட்டோம்.. செல்லூர் ராஜூ: யூடியூப், வாட்சப் இருந்தா எதையும் போடுவீயா?
ராமசுப்பிரமணியன்: உண்மையா, பொய்யான்னு மேல சொல்லுங்க.. செல்லூர் ராஜூ: நீயெல்லாம் ஒரு ஆளாடா எனக்கு, ராமசுப்பிரமணியன்: நான் ஆள் இல்லேன்னா எனக்கெதுக்கு போன்
போடுறீங்க? இப்படி உரையாடல் முடிகிறது.

 

The post பாஜவுக்கு ஆதரவாக செயல்பட்ட எடப்பாடியிடம் புகார் இளைஞரணி நிர்வாகியை மிரட்டிய செல்லூர் ராஜூ: ஆடியோ வைரல் appeared first on Dinakaran.

Tags : Sellur Raju ,Edappadi ,BJP ,Madurai ,AIADMK ,Dr. ,Saravanan ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…