×

காண்ட்ராக்டர்களுக்காக கட்சி நடத்திக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி: அண்ணாமலை விமர்சனம்

தேனி: காண்ட்ராக்டர்களுக்காக கட்சி நடத்திக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என்று அண்ணாமலை காட்டமான விமர்சித்துள்ளார். ஜெயலலிதா போல் 2024-க்கு பின் தினகரனால் தமிழகத்தில் மாற்றம் வரும் என தேனியில் அண்ணாமலை பேசிவருகிறார். தமிழகத்தில் மாற்றம் வரவேண்டும் என்பதற்காக டிடிவி தினகரனே களமிறங்கி உள்ளார் என்றும் தெரிவித்தார். மேலும், டிடிவி தினகரன் நல்ல தலைவன் என்பதால் எடப்பாடி பழனிசாமி அவரை பார்த்து பயப்படுகிறார்.

யார் எட்டப்பன் என்பதில் அதிமுக தொண்டர்கள் தெளிவாக இருக்கிறார்கள். மக்களவை தேர்தலில் காண்ட்ராக்டர்களுக்குதான் எடப்பாடி பழனிசாமி சீட் ஒதுக்கியுள்ளார். டிடிவி தினகரனுக்கு மக்கள் செல்வாக்கு இருப்பதால்தான் அவரை எடப்பாடி பழனிசாமி புறக்கணித்துள்ளார். மக்களவை தேர்தலுக்குப் பின் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக இருக்காது. ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகு உண்மையான தலைவர்கள் கைக்கு அதிமுக வந்துவிடும். அதிமுகவை காண்ட்ராக்டர்களுக்கு தாரைவார்த்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

 

The post காண்ட்ராக்டர்களுக்காக கட்சி நடத்திக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி: அண்ணாமலை விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : Edappadi Palaniswami ,Theni ,Annamala Kattamana ,Annamalai ,Dinakaran ,Tamil Nadu ,Jayalalithaa ,DTV ,
× RELATED பழைய பேருந்துகளை பழுதுபார்க்க அதிமுக...