×

எடப்பாடி இருக்கும்வரை அதிமுக ஒருங்கிணையாது: டிடிவி.தினகரன் திட்டவட்டம்

தேனி: பதவி ஆசை பிடித்த எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக இருக்கும்வரை அதிமுக ஒருங்கிணையாது என்று டிடிவி.தினகரன் திட்டவட்டமாக தெரிவித்தார். அமமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் நேற்று நடந்தது. கூட்டத்தில் பங்கேற்ற கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் அளித்த பேட்டி: வரும் சட்டமன்றத் தேர்தலில் நான் ஆண்டிபட்டியில் போட்டியிடப் போவதாக செய்திகள் வெளிவந்தது. ஆனால் அது உண்மையல்ல. எடப்பாடி பழனிசாமி சுயநலவாதி, சுயநலம் மிக்க மனிதர், பதவி வெறியர். துரோக சிந்தனை படைத்தவர். அதிமுக ஒருங்கிணைய எடப்பாடி பழனிசாமி தடைக்கல்லாக இருக்கிறார். அவர் பொதுச்செயலாளராக இருக்கும் வரை கட்சி ஒருங்கிணைய வாய்ப்பில்லை. அதேசமயம் கட்சி தொண்டர்கள் எல்லாம் ஒருங்கிணைவார்கள். ஒன்றிய அரசின் பட்ஜெட்டானது, இந்தியாவை வல்லரசு ஆக்குவதற்காகவும், வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதற்குமான பட்ஜெட்டாக உள்ளது. இந்தியாவில் 28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உள்ளன. அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே நேரத்தில், ஒரே மாதிரி நிதி ஒதுக்கீடு செய்ய முடியாது. வரக்கூடிய பட்ஜெட்களில் நிதி ஒதுக்கீடு செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு கூறினார்.

* சசிகலா சுற்றுப்பயணம் மழுப்பல் பதில்
‘‘சசிகலா அதிமுகவினரை ஒருங்கிணைக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளாரே’’ டிடிவி.தினகரனிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர், ‘‘அது அவருடைய ஆசை… அவங்க போறாங்க’’ என மழுப்பலாக பதில் அளித்தார்.

The post எடப்பாடி இருக்கும்வரை அதிமுக ஒருங்கிணையாது: டிடிவி.தினகரன் திட்டவட்டம் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Edappadi ,DTV.Thinakaran ,Theni ,Edappadi Palaniswami ,AMU ,Palanisettipatti ,DTV ,Dinakaran ,
× RELATED தமிழகம் முழுவதும் சிறப்பு குழு...