- சூலகிரி
- Veppanahalli
- சட்டமன்ற தொகுதி
- சூளகிரி தாலுக்கா
- தேர்தல் பறக்கும் படை சண்முகப்பிரியா
- கே.என்
- தொட்டி
- தின மலர்
சூளகிரி, ஏப்.11: சூரிகிரி தாலுகா உள்ளடங்கிய வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதியில், தேர்தல் பறக்கும் படையினர் சண்முகப்பிரியா மற்றும் அலுவலர்கள் நேற்று மாலை கே.என்.தொட்டியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த காரை நிறுததி சோதனை மேற்கொண்டனர். அப்போது உரிய ஆவணமின்றி, காரில் கொண்டு வந்த ₹1.67 லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். விசாரணையில் கர்நாடகா அரோமகனஹள்ளி பகுதியை சேர்ந்த ஆனந்தா (29) என்பவர் ெகாண்டு வந்தது தெரிய வந்தது. சோதனைக்கு பின்னர், அந்த பணத்தை ஓசூர் சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
The post காரில் கொண்டு சென்ற ₹1.67 லட்சம் பறிமுதல் appeared first on Dinakaran.