×

வையம்பட்டி அருகே பறக்கும்படை சோதனையில் ரூ.1.21 லட்சம் பறிமுதல்

 

மணப்பாறை, ஏப்.5: வையம்பட்டி அருகே உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1,21,630 பணத்தை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டியில் தவளைவீரம்பட்டியில் இருந்து தரகம்பட்டி சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டிருந்தனர்.

அப்போது கரூர் மாவட்டம் வீராணம் பட்டி சரக்கம்பட்டியை சேர்ந்த நடராஜ் மகன் பாலசுப்பிரமணி (24). ஓட்டி வந்த டூவீலரை ஆய்வு செய்தபோது உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1 லட்சத்து 21 ஆயிரத்து 630 பணம் கொண்டு சென்றது தெரியவந்தது. இதனையடுத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரி ஜெகநாதன், மணப்பாறை வட்டார கல்வி அலுவலர் மற்றும் காவலர்கள் பணத்தை பறிமுதல் செய்து மணப்பாறை தாசில்தார் தனலட்சுமி வசம் ஒப்படைத்தனர்.

The post வையம்பட்டி அருகே பறக்கும்படை சோதனையில் ரூ.1.21 லட்சம் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Wayampatty Manapara ,Wayampatti ,Daragampatty ,Davalaivirampatti ,Viyambatti ,Manapara ,Trichy ,Viyampatti ,Dinakaran ,
× RELATED சாகுபடியில் 20% கூடுதல் மகசூல் ஈட்ட...