- கிருஷ்ணகிரி
- மாவட்ட தேர்தல் இன்ஸ்பெக்டர் ஜெனரல்
- கிருஷ்ணகிரி மாவட்டம்
- கிரண்குமாரி பாசி
- மாவட்ட தேர்தல் பொது பார்வையாளர்
- கிருஷ்ணகிரி நாடாளுமன்றத் தொகுதி
- தின மலர்
கிருஷ்ணகிரி, ஏப்.5 கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மாநில எல்லை சோதனைச்சாவடியில் நடைபெறும் வாகன தணிக்கையை, மாவட்ட தேர்தல் பொது பார்வையாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கிருஷ்ணகிரி நாடாளுமன்றத் தொகுதிக்கான மாவட்ட தேர்தல் பொது பார்வையாளராக, கிரண்குமாரி பாசி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பர்கூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களை நேற்று ஆய்வு செய்தார்.
மேலும், ஆந்திர மாநில எல்லையையொட்டியுள்ள குருவிநாயனப்பள்ளி சோதனைச்சாவடியை பார்வையிட்டார். அப்போது, வாகன தணிக்கை குறித்து அங்கிருந்த தேர்தல் பறக்கும்படையினரிடம் கேட்டறிந்தார். அந்த வழியாக வரும் டூவீலர் முதல் லாரிகள் உள்பட அனைத்து வகையான வாகனங்களையும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்க வேண்டுமென உத்தரவிட்டார். தொடர்ந்து பர்கூர் தாசில்தார் அலுவலகத்தில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையை பார்வையிட்டார்.
மேலும், தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் சி.விஜில் ஆப் மூலம் வரபெற்ற புகார்கள், அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக, பர்கூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாடி மையத்தில், மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள சாய்வு தளம், மின்சார வசதி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள் குறித்து வாக்குச்சாவடி எண்கள் அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, தொகுதிக்கு உட்பட்ட வாக்காளர்கள் விபரம் மற்றும் வாக்காளர்களுக்கு வழங்கப்படும் பூத் சிலிப் விபரங்கள் குறித்து கேட்டறிந்தார். அப்போது, உதவித் தேர்தல் அலுவலர் மற்றும் தனித்துணை கலெக்டர் பன்னீர்செல்வம், தாசில்தார் திருமுருகன், தேர்தல் பார்வையாளரின் தனி அலுவலர் ரமேஷ், வருவாய் ஆய்வாளர் குமரவேல் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
The post சோதனை சாவடிகளில் பொது பார்வையாளர் ஆய்வு appeared first on Dinakaran.