- அரூர்
- அரூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்
- Arur
- Morapur
- கேம்பினநல்லூர்
- தீர்த்தமலை
- கோட்டப்பட்டி
- கோபிநாதம்பட்டி
- கூட்ரோடு
- Pudupatti
- இருளப்பட்டி
- வேளாண்மை கூட்டுறவு
அரூர், ஏப்.2: அரூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது. இதில் அரூர், மொரப்பூர், கம்பைநல்லூர், தீர்த்தமலை, கோட்டப்பட்டி, கோபிநாதம்பட்டி கூட்ரோடு, புதுப்பட்டி, இருளப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் பருத்தியை அரூர் வேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்கு விற்பனைக்கு கொண்டு வந்தனர். நேற்று நடந்த பருத்தி ஏலத்தில் 98 விவசாயிகள், 240 பருத்தி மூட்டைகளை ஏலத்திற்கு கொண்டுவந்தனர். இதில் ஆர்சிஎச் ரகம் பருத்தி குவிண்டால் ₹7,209 முதல் ₹8,439 வரை ஏலம் போனது. நேற்றைய ஏலத்தில் ₹8 லட்சத்திற்கு பருத்தி ஏலம் போனதாக செயலர் அறிவழகன் தெரிவித்தார்.
The post 8 லட்சத்திற்கு பருத்தி ஏலம் appeared first on Dinakaran.