×
Saravana Stores

கார் மோதி விவசாயி பலி

கிருஷ்ணகிரி, மார்ச் 23: போச்சம்பள்ளி காட்டுவென்றஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சகாதேவன்(48), விவசாயி. இவர் நேற்று முன்தினம், கிருஷ்ணகிரி- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போலுப்பள்ளி என்ற இடத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு, சிகிச்சைக்காக சென்றார். பின்னர், மீண்டும் பஸ் ஏறுவதற்காக மருத்துவமனை முன்பு உள்ள சாலையை கடக்க முயன்றார். அப்போது, அவ்வழியாக வந்த கார் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த குருபரப்பள்ளி போலீசார், உடலை கைப்பற்றி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கார் மோதி விவசாயி பலி appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Sahadeva ,Bochampalli Kattuvennahalli ,Polupally ,Krishnagiri-Bangalore National Highway ,Dinakaran ,
× RELATED ஓசூரில் தனியார் பள்ளி மாணவியை...